ஓவியக்கண்காட்சி

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சார்ந்த ஓவியர் மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி நேற்று  29/10/20 மக்கள் மாமன்ற நூலகத்தில் துவங்கியது .

 மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர்  சி. சுப்ரமணியன் துவங்கி வைத்தார். டிட்டோனி முத்துச்சாமி, எழுத்தாளர்கள் செல்லம் ரகு, மதுராந்தகன், ஆழ்வைக்கண்ணன், சுப்ரபாரதிமணியன்., உள்ளிட்டோரும் மக்கள் மாமன்ற  நிர்வாகிகள் ராஜா, சித்தார்த்தன், நூலகர் ஆறுமுகம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மற்றும் இரு நூல்கள் அறிமுகங்கள் நடைபெற்றன. மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெறும்/ காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். கனவு அமைப்பு இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது

*

மருத பாண்டியன் வயது 83. 65 ஆண்டுகளாக ஓவியப்பணியில் இருப்பவர்

அவரின் ஓவியப்பாணி மரபு ரீதியான சித்திரங்கள் என்றாலும் நாவல் பாணியில் உணர்வுகள் மிகுந்ததுஓவியக்க்கலைமாமணிகலைமுதுமணி போன்ற ஓவியத்துறை விருதுகளைப் பெற்றவர் .திருப்பூர் வாசி.

“ சர்வோதயா தடாகத்தில் மலர்ந்த ஓவிய மலர் :ஓவியரின் அனுபவம்  என்ற தலைப்பில் மருதபாண்டியன் வாழ்க்கை அனுபவக் கட்டுரைகள் சமீபத்தில் கனவு.,8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது ரூ 75

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதைமண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்