ஓ… (TIN Oo) ………….!

Spread the love


காந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு,
அகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக,
ராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, ஒரு பெண் பறவை,இன்று
அரசியல் வானில் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துள்ளது- அனுங் சான் சூ குயீ.
( AUNG SAN SUU KYI)

சமீபத்தில் மாயான்மாரில் நடந்த தேர்தலில், குயீ, ஜனநாயாக
கட்சியிலிருந்து, பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று,
ராணுவ அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மீண்டும் மயான்மாரிலும் காந்தியம் மலர்ந்துள்ளது.

மாயான்மார், பல்லாண்டுக் காலமாக ராணுவ பிடியில் சிக்குண்டு,

அந்த கதைகளையெல்லாம், மீடியாக்கள் மூலமாகத்தான், நாம் பார்த்து
வந்தோம். அந்த மக்கள் பட்ட வேதனை, நமது பாட்டனும், முப்பாட்டனும்,
வெள்ளையன் காலத்தில் அனுபவித்ததுபோல்தான் இருக்குமென நினைக்கின்றேன்.

குயீக்கு இந்த விதமான மன உறுதியும், தன்னம்பிக்கையும், அகிம்சா வழி

போராட்ட குணமும், காந்தியித்திலிருந்து கிடைத்ததாக, அவர் கூறுகின்றார்.

காந்தீயம், மனித அடக்கு முறையை எதிர்த்து , வெளிவந்த, சஞ்சீவிவனம்.

மனித உறவுகளை கூறுபோடுகினற காலனிய ஆதிக்க சக்திகளுக்கு, அகிம்சா
வழியில் நின்று போராட கற்று கொடுத்தது.

ஆனால் காந்தீயத்திற்கு எதிர் திசையில் பயனித்த, உலக தாராளமயமாக்களும்,
பன்னாட்டு சந்தை வணிகமும், வெளிநாட்டு இறக்குமதி கொள்கையும்,
வளரும் நாடுகளின் மக்கள் மூளை சலவை செய்து, அந்நாட்டு வணிகத்தையும்
பெருக்கி, கிராம பொருளாதாரத்தையும், கடன் சுமை ஏறிய வண்டியாக,
ஒவ்வொரு மத்தியதர குடிமகனும், தள்ளாடும் படி செய்து விட்டது ,
இந்த உலகச் சந்தை.

இதன் விளைவாக , சோவியத் யூனியன் உடைந்தது. உலகின் சூப்பர்
பவராக அமெரிக்கா வலம் வருகின்றது.

ஜனத்தொகை பெருத்த நாட்டில்- பசியும்- வேலையில்லாத் திண்டாட்டும்,
வறுமையும்- படிப்பறிவின்மையும், அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகி,
தீவிரவாதம் பெருக்கமும், காடுகள் அழிதலும், சுற்றுப்புறச்சுழல் மாசு படுதலும்
அதிகமாகிக் கொண்டே போகின்றது.

மயான்மாருக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்திற்கு
கிடைத்த வெற்றி” என்று குயீ கூறுகின்றார்.

ஆனால், குயீயின், அரசியல் குருவாக திகழும், 80 வயது டின் ஓ,
இன்று தான், மயான்மாரில், ஒரு சிறு நம்பிக்கைகீற்று முளைத்துள்ளது.
இன்னும், நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அரசின் கொள்கையில்,
பலவித மாற்றங்களை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இது நாள்வரை, இந்த நாட்டின் அரசியல் கொள்கை, ராணுவ
ஆட்சியின் கொள்கையால், ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்பட்டு,
மக்கள் பேச்சு உரிமை யிழந்து, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு,
நாடாளு மன்றத்தில், ராணுவ தளபதிகளே எல்லா முடிவுகளும் எடுக்கும்
உரிமை கொடுக்கப்பட்டத்து.

இதற்கெல்லாம், முற்று புள்ளி வைக்க வேண்டுமென ஓ கூறுகின்றார்.

மாயன்மாரில், முதலில் அமைதி நிலவ வேண்டும், பிறகுதான், மக்கள்,
நிம்மதியாக மூச்சுவிட முடியும். அதன் பிறகு, நல்ல மனிதர்களின்
சிந்தனையால், நாட்டின் முன்னேற்றத்தை பற்றி யோசிக்க வேண்டும்
என்று கூறுகின்றார். அரசியல் குரு ஓ !

Series Navigationவார்த்தைகள்உங்களில் யார் அடுத்த பிரபுதேவா