கட்டங்கள் சொற்கள் கோடுகள்

கட்டங்கள் வரைந்து

சொற்களை உள்ளே இட்டேன்

அவற்றுக்குள் தொடர்பு

ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன்

கட்டங்கள் ஒன்றோடொன்று

இணைந்தன

சொற்கள் அடைபட்டுப்போய்

பேச மறுத்தன

கட்டங்களை நீக்கி விட்டு

சொற்களையும் கோடுகளையும்

இணைத்து விடலாம் என

எண்ணினேன்

கட்டி வைத்த சொற்களும்,

இணைக்க இழுத்த கோடுகளும்,

ஒட்ட மறுத்தன

மீண்டும் கட்டங்களை

வரைந்தபோது அந்த அதிசயம்

நிகழ்ந்தது.

கட்டங்களும், இணைப்புக்கோடுகளும்

ஒரு சேரக்காணாமல் போயின

எஞ்சிய சொற்கள்

என்னைக்கேலி

செய்து கொண்டிருந்தன.

 

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

 

Series Navigationமுதுகெலும்பா விவசாயம் ?இரண்டு கவிதைகள்