யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்

This entry is part 46 of 46 in the series 19 ஜூன் 2011

“கதைக்குள்ளேயிருந்து கதையை வெளியே எடுப்பதுதான் நான் செய்கிற வேலை” என்று சா. கந்தசாமி தனது எழுத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. இதை ஓர் இலக்கணம் என்றே விதித்துக் கொள்ளலாம், தற்காலப் படைப்பிலக்கியப் போக்கை அடையாளம் கண்டுகொள்வதற்கு. கதைக்குள்ளேயேயிருந்து பதமாகக் கதையை வெளியே எடுத்துப்போட வேண்டும். அது வாசக சுதந்திரத்திற்கு விசாலமான வெளியைக் கொடுத்து வாசகனை கெளரவிப்பதாக அமையும்.   இந்த விதியிலிருந்து வழுவாமல் ஒரு முயற்சியில் இறங்கி, அதில் கணிசமான வெற்றியையும் பெற்று விட்டிருக்கிறார், க. முத்துக்கிருஷ்ணன் என்ற […]

இப்போதைக்கு இது – 2

This entry is part 45 of 46 in the series 19 ஜூன் 2011

”அன்புக் குழந்தைகளே! தமிழ் நம்முடைய தாய்மொழி. நாம் நமது தாய்மொழியை மதிக்க வேண்டும். தமிழில் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் பழக வேண்டும். ஆங்கிலம் உலக மக்களை இணைக்கும் மொழி. நம் நாட்டின் பல்வேறு பாகங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துவரும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும், பல்வேறு தரமான இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் உதவும் மொழியாக இருந்துவருகிறது. ஒருவருக்கு ஆங்கிலம் தெரிவதால் மட்டும் அவர் சிறந்த, உயர்ந்த மனிதராகிவிடமாட்டார். நல்லமனிதராக வாழ்ந்தால் மட்டுமே ஒருவர் மதிப்பிற்குரியவர்; உயர்ந்த மனிதர். இதை […]

அறிவா உள்ளுணர்வா?

This entry is part 44 of 46 in the series 19 ஜூன் 2011

கனிமொழி கைது பற்றி எழுதிய ஜெயமோகன் இப்படி முடித்திருந்தார். “இச்சூழலில் ஊரே கூடிக் கொண்டாட்டம் போடும் போது கூடவே சென்று நாலு அடி போடுவதில் எனக்கு ஆர்வமில்லை. கனிமொழியைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரும்பிப் பதவிக்கு வரட்டும், அப்போது சொல்கிறேன்.” ஜெயமோகன் இதை இந்த விதமாகப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. இதைப் படித்தவுடன் 2000 ஆண்டு தீபாவளி தினமணி மலரில் சுகதேவ் ஜெயகாந்தனிடம் எடுத்த பேட்டியில், பின் தொடரும் நிழலின் குரல் பற்றிக் கேள்வி […]

காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை

This entry is part 43 of 46 in the series 19 ஜூன் 2011

வெகுகாலத்துக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு நகைச்சுவை துணுக்கு வந்தது. – ஒருவர் இன்னொருவரிடம் கேட்கிறார். என்ன டப்பா மேல ராஜீவ்காந்தி படத்தை ஒட்டி ஹால்ல வச்சிருக்கீங்க? அவர் சொல்கிறார் டிவியில எப்பவும் இப்படித்தானே வருது? அதனால சீப்பா முடிச்சிட்டேன்.-   தூர்தர்ஷன் என்ற இந்திய அரசின் தொலைகாட்சி வந்த புதிதில் ராஜீவின் முகமே தினந்தோறும் எல்லா நேரமும் பார்த்து அலுத்த மக்கள் தொலைக்காட்சியையே வெறுக்கும் அளவுக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி இருந்தது. எப்போதும் இந்தி நிகழ்ச்சிகள். எப்போதாவது […]

தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:

This entry is part 42 of 46 in the series 19 ஜூன் 2011

1. “ நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போன காலம் உண்டு. நீரை அள்ளி அள்ளி குடித்திருக்கிறோம். நொய்யல் ஆற்று மணலில்  அரசியல் கூட்டங்கள் நடப்பது ஒரு சாதாரண நிகழ்வாக  இருந்திருக்கிறது. திருப்பூர் மக்கள் உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். அதுதான் உலக அரங்கில் பனியன் பெருமையை உயர்த்தியது. இன்றைக்கு 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியைத்தரும் நகரமாக மாறியுள்ளதற்குக் காரணம் அந்த  உழைப்புதான்.  வந்தாரை வாழ வைத்த பூமியாக திருப்பூர் மாறியதற்குக் காரணம் குறுகிய காலத்தில் எந்த வகையான […]

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4

This entry is part 41 of 46 in the series 19 ஜூன் 2011

(ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.” நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் […]

தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா

This entry is part 40 of 46 in the series 19 ஜூன் 2011

பேரன்புடையீர் தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். அன்பு கூர்ந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் தமிழ் இணையம் 2011 குறித்த நிகழ்வைத் தெரிவிக்கவும் வேண்டுகிறேன். தங்களின் தமிழ்சங்க உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். அன்புடன் வா.மு.சே. கவிஅரசன் தலைவர் உத்தமம் தலைவர் பன்னாட்டுக் குழு- தமிழ் இணையம் 2011. www.infitt.org   TI2011_PressReleaseJune14.pdf  

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40

This entry is part 39 of 46 in the series 19 ஜூன் 2011

சென்ற வாரம் सह (saha) அதாவது ‘உடன்’ என்ற சொல்லுக்கு முன்னால்  உள்ள சொல் எப்போதும் तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டிருக்கும் என்று பார்தோம் அல்லவா? அதேபோல் இந்த வாரம் विना (vinā) என்ற சொல்லைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.   विना इति शब्दस्य योगे अपि तृतीयाविभक्तिः भवति। (vinā iti śabdasya yoge api tṛtīyāvibhaktiḥ bhavati |) ’வினா’ அதாவது அன்றி, இல்லாமல் என்ற சொல்லின் முன் […]

மாலைத் தேநீர்

This entry is part 38 of 46 in the series 19 ஜூன் 2011

கொடும் மழையினூடே கரைந்தோடும் ஆற்றோர மணல் படுகைகளைப் போல் ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய் மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும் சில எம காத உருவங்களையோ பாத விரல்களினிடையேயான சேற்றுப் புண் எரிச்சல்களையோ ஓர் தேநீரின் இதமான கதகதப்பில் சில மணித்துளிகளாவது அவைகளையற்று இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள் மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ எப்பலன்களுமற்ற  உங்களையொத்தாருடையேயான எவ்விஷயங்களுமற்ற வெற்று […]

சென்னை வானவில் விழா – 2011

This entry is part 37 of 46 in the series 19 ஜூன் 2011

சென்னை வானவில் கூட்டணி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை மூன்றாவது முறையாக, தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை ஆதரிக்கவும், அவர்கள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம். 1969 ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் Stonewall Inn என்ற இடத்தில், ஜூன் மாதம் நிகழ்ந்த […]