கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு

 

“ கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 

2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு

========================================================================

” கனவு “ இலக்கிய வட்டம்

திருப்பூர்” கனவு “ இலக்கிய வட்டத்தின் மே மாதக்கூட்டம் ஓசோ பவனில் நடைபெற்றது. பரிக்சா சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் குறும்பட இயக்குனர் ரவிக்குமாரின் “ பசி “ குறும்படத்தை அறிமுகப்படுத்தி மதுராந்தகன் உரையாற்றினார்.

சுப்ரபாரதிமணியன் “ நூற்றாண்டுச் தமிழ்ச் சிறுகதைகளும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் “ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். வழக்கறிஞர் ரவி “ வியாபாரமயமாகும் உலகம் “, சிவதாசன் “ திருப்பூரை ஆண்ட இரும்புளீ குமரன் வரலாறு ” , சுபமுகி

“ கையருகே அபாயம் –சுற்றுச்சூழல் கேடு “ ஆகிய தலைப்புகளில் பேசினர். கவிஞர் ஜோதி கவிதைகள் வாசித்தார். ராஜராஜன் நன்றி கூறினார். மறைந்த எழுத்தாளர் எஸ். ஏ. பாலகிருஸ்ணன் மல்லிக்கின் முதலாண்டு நினைவு அஞ்சலியை ஒட்டி

அவரின் பிரசுரமாகாத படைப்புகள், அஞ்சலிக் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பொன்றை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

-சாமக்கோடாங்கி ரவி

“ கனவு “ 65 ம் இதழ் ( காலாண்டிதழ் ) வெளிவந்துள்ளது, இவ்விதழில்

—————————————————————-

*திரைப்படக்கட்டுரைகள்:

^ இஸ்லாமும் தீவிரவாதமும்= சுப்ரபாரதிமணியன்

^ விடுதலைப் போராட்டம் என்பது பயங்கரவாதம் இல்லை

=யமுனா ராஜேந்திரன்

^ மூன்றாம் உலக சினிமாவின் பிரச்சினைகள்-

= விகே.ஜோசப் தமிழில்:நிர்மால்யா

*சிறுகதைகள்:

^ கீதாஞ்சலி பிரியதர்சினி, பி. அப்பன்

*கட்டுரைகள்:

^ கோவை ஞானி, சிற்பிபாலசுப்ரமணியன், கலாப்ரியா

*கவிதைகள்:

^மகுடேஸ்வரன். அய்யப்பமாதவன், பிரதிபா ஜெயச்சந்திரன்., சுபமுகி,, கோவை சதாசிவம், சூர்யநிலா, கோனூர் வைரமணி, சக்தி அருளானந்தம், ,க ஆனந்த், கே சங்கரி, இரத்தினமூர்த்தி, ஸ்ரீனிவாஸ்பிரபு

விலை : ரூ; 10 ஆண்டுச் சந்தா : ரூ 50

==============================================================================

(கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602)

( subrabharathi@gmal.com, kanavuthirupur@yahoo.co.in )

Series Navigationகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி