கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17

கம்பன் கழகம், காரைக்குடி

புரவலர் –திரு எம்.ஏ. எம் ஆர் முத்தையா என்ற ஐயப்பன்

அன்புடையீர்

வணக்கம்

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகின்றது. திரு பழ. பழனியப்பன் தம் பெற்றோர் நூற்றாண்டு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவினை திரு கம்பன் அடிசூடி ‘கைகேயி படைத்த கம்பன்’’ என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார்கள்.

அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், காரைக்குடி கம்பன் அறநிலைத் தலைவரும் ஆன திரு. சக்தி. திருநாவுக்கரசு அவர்கள் தலைமை ஏற்றுத் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க இசைந்துள்ளார்கள்

நிகழ் நிரல்

மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை தேநீர்

6.00 மணி்- இறைவணக்கம்

6.05. மணி வரவேற்புரை.பேரா. மு.பழனியப்பன்

6.15 மணி தலைமையுரை திரு. சக்தி அ. திருநாவுக்கரசு

6.30 மணி ஆய்வுரை

கைகேயி படைத்த கம்பன் – திரு கம்பன் அடிசூடி

7.30 மணி சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.45 மணி நன்றி பேராசிரியர் மா. சிதம்பரம்

7.55 விருந்தோம்பல்

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

அன்பும் பணிவுமுள்ள

கம்பன் கழகத்தார்

நன்றிகள்

கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும்

பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்

அரு,வே. மாணிக்கவேலு –சரஸ்வதி அறக்கட்டளை

நமது செட்டிநாடு இதழ்

நிகழ்ச்சி உதவி மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை காரைக்குடி

Series Navigation65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு