கற்றல்

Spread the love

 

கடல்

பேசிக் கொண்டே இருக்கும்.

 

கேட்டுக் கொண்டே

இருப்பேன்.

 

ஒவ்வொரு கணமும்

அலை அலையாய் முடியாத கேள்விகளைக்

கேட்டுக் கொண்டே இருக்கும்.

 

கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக்

கற்றுக் கொள்ள

கடல் கேட்கும் கேள்விகளா?

 

ஆழத்தில் உள்ளொடுங்கின் அமைதியென்று

மெளனமாய் இருக்கை

நன்றென்று உணர்வேன்.

 

கடல் மறந்ததை

கடலிடம்

சொல்லி விடலாமென்றால்

கடல் பேசாமல் ஓய்வதாயில்லை.

கு.அழகர்சாமி

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்