கலை காட்சியாகும் போது

Spread the love

நகரின் ஏதோ ஒரு
கட்டிடத்துள் ஆளரவமில்லாக்
கண்காட்சிக் கூடத்து மூலையை
நீங்கி
ஒரு நவீன ஓவியம்

நிறைந்த நிதியை
செல்வாக்கைப்
பறைசாற்றும்
விரிந்த வரவேற்பறைச்
சுவரில்

காத்திருப்போரினுள்
அவர்களை அங்கே
வரவழைத்த காரணம்
தவிர வேறு எதுவும்
விழித்திருக்காது
கலாரசனையும் தான்

தன் கலைக்கான
ரசனையின்
கவனிப்பின்
விமர்சனத்தின்
தொடுகை கலைஞனின்
கூர் ஆசை

அதைச் சென்றடையும்
வரைபடம் அவன்
தூரிகைக்கு அப்பால்

காட்சிக் கூடத்திலிருந்து
மாளிகைக்கு
கலை
பயணித்த வாகனம்
வணிகம்
காரணம் அதுவல்ல

Series Navigationதமிழிசை அறிமுகம்யாமினி கிருஷ்ணமூர்த்தி (8)