கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்

மதிப்புக்குரிய ஊடக நெறியாளர்கள் மற்றும் கலை – இலக்கிய ஆர்வலர்களுக்கு

வணக்கம்!

சென்னையில் வெளியாகும் காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு தொடர்பாக தங்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்தமுறை கவிஞர் கி பி அரவிந்தன் நினைவின் மூன்றாவது ஆண்டு செயற்திட்டமாக அமைந்த – உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018′ – முடிவுகள் இத்தோடு இணைக்கப்படுகிறது.

இத்தகைய செயற்திட்டம் பரவலான பார்வையாளர்களைச் சென்றடைய தங்களைப் போன்ற ஊடக நெறியார்களதும் கலை இலக்கியச் செயற்பாட்டாளரதும் ஒத்துழைப்பை எதிர்பார்த்து இம்மடல் வழியாகத் தொடர்பு கொள்கிறோம். எமது இம்முயற்சியை தங்களாலான நவீன தொடர்பூடக – இணையவலைப்பின்னல் – சமூக வலைத்தளத் தொடர்புகளூடாகவும் பரவலாக்கி ஊக்கமளிக்க அன்போடு எதிர்பார்க்கிறோம்.

இத்தகவல் பரவலான பார்வையாளர்கட்குச் சென்றிட வழி செய்திடுவீர்!

இப்போட்டி தொடர்பாக எம்மால் வெளியிடப்பட்ட அறிவிப்பு இத்தோடு இணைக்கப்படுகிறது.

நன்றியுடன்

முகிலன்

(காக்கைச் சிறகினிலே சார்பாக)

காக்கை கரவாக் கரைந்துண்ணும்

‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ –  (வள்ளுவராண்டு 2049)

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த

மூன்றாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு

முடிவுகளை காக்கை குழுமம் வெளியிட்டிருக்கிறது.

 

சென்னையிலிருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த புலம்பெயர் கவிஞர் ‘கி பி அரவிந்தன்’ நினைவாக ஆண்டு தோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகளை நடாத்திவருகிறது. அந்த வகையில் மூன்றாவது ஆண்டில் ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ இனை நடாத்தியது.

 

இந்தப் போட்டியில் உலகளாவிய 59 எழுத்தாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதிச் சுற்றுக்கு 30 குறுநாவல்கள் தெரிவாகின. இந்தக் கடுமையான எழுத்துப்போட்டியின் தெரிவுகளை நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர்கள் மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா)

மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே) கொண்ட  குழு பரிசீலனையில் எட்டப்பட்ட முடிவுகளை காக்கை இதழ்க் குழுமம் 10.04.2018 அன்று முறைப்படி வெளியிட்டிருக்கிறது.

 

குறுநாவல்களின் பெறுமானம் கருதி பரிசுக்குரியனவாக  14 குறுநாவல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பூர்வீகமும் – புலம்பெயர்வுமென  இந்தியா, இலங்கை, ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என தற்போது புவி எங்கு பரந்து வாழும் தமிழர்களது படைப்புகளின் மஞ்சரியாக அமைந்தமை சிறப்பானதாகும்.

 

பணப்பரிசுகளும் சான்றிதழுமான குறுநாவல்கள் – 7 மற்றும் காக்கையின் ஓர் ஆண்டு சந்தா பெறும் தெரிவுக் குறுநாவல்கள்  – 7 என இவை தெரிவாகியுள்ளன. இந்தக் குறுநாவல்கள் அனைத்தும் காக்கை வெளியீடாக நூல் வடிவம் பெறும் என காக்கை குழுமம் அறிவித்திருக்கிறது..

 

  1. முதலாவது பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

கொங்கை – அண்டனூர் சுரா (இந்தியா)

 

  1. இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

மைதானம் – சோ. தர்மன் (இந்தியா)

)

 

  1. மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

குரவை மீன்கள் புதைந்த சேறு – மோனிகா மாறன் (இந்தியா)

 

திருத்தப்பட்ட  பட்டியல் :  09.04.2018 அன்று வெளியாகியிருந்த இரண்டாவது பரிசு ‘இராமன் ஒரு தூர தேசத்து மகாராஜா’  எனும் குறுநாவல் ஊடகமொன்றில் ‘தூர தேசத்து மகாராஜா’  எனும் தலைப்பில் வெளியாகியுள்ளதால் தகுதிநீக்கமடைகிறது.

நான்கு ஆறுதல் பரிசுகள் : 1500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

  • நீலு என்கிற நீலாயதாட்சி – எஸ். ஸ்ரீவித்யா
  • இனியும் விதி செய்வதோ… ! – மைதிலி தயாபரன் (இலங்கை)
  • வெயில் நீர் – பொ. கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)
  • நெடுஞ்சாலைப் பைத்தியங்கள் – வி. வல்லபாய் (இந்தியா)

 

ஆறுதல் பரிசுக்கு நான்கு குறுநாவல்கள் தெரிவாகியுள்ளமையால் இந்தப் பரிசுத் தொகை தலா 1500 இந்திய ரூபாய்களாகத் நிர்ணயித்து இந்த நால்வருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

v  காக்கை குழுமத்தின் தெரிவுக் குறுநாவல்கள் : ஓர் ஆண்டு காக்கைச் சந்தா மற்றும் சான்றிதழ் (ஏழு)

o   மரணம் என்னும் தூது வந்தது – கலாபூஷணன் சோ. ராமேஸ்வரன் (கனடா)

o   நில வெளியேற்றம் – அன்வர்ஷாஜீ (இந்தியா)

o   வானவில் கனவுகள் – கிருத்திகா அய்யப்பன்

o   மெல்பேர்ன் வெதர் – கே. எஸ். சுதாகர் (அவுஸ்திரேலியா)

o   பரதாயணம் – மஹாரதி (இந்தியா)

o   சிலுவை – வ. ஹேமலதா (சிங்கப்பூர்)

o   பெயரற்றவனின் நாட்குறிப்பு – தங்கராசா செல்வகுமார் (இலங்கை)

 

பரிசு பெற்றவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : kaakkaicirakinile@gmail.com

ஆசிரியர் வி. முத்தையா தொடர்பு எண் : (இந்தியா 0091) +4428471890 /  +9841457503/ +9444759524

288 டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை -600 005.

இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்துகிறது காக்கை குழுமம்.

தகவல் : முகிலன் (காக்கை குழுமம் சார்பாக)

 

Series Navigationபர்ணசாலையில் இராவணன்..உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா