கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 2 of 29 in the series 1 டிசம்பர் 2013

 

சி. ஆரோக்கிய தனராஜ்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர்

தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 620 002.

தொடக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் முழுமையான இலக்கிய வளர்ச்சி அடைந்த இலக்கிய வகை வாழ்க்கை வரலாற்று இலக்கியமாகும். இது மேலை நாட்டினரின் வருகைக்குப் பிறகு உரைநடை வடிவில் சிறுதை, புதினம், உரைநடை, வசன கவிதை, உரைவீச்சு ஆகியன வகைமையில் வளர்ச்சி பெற்றன. 2004ஆம் ஆண்டு கவிஞர் வ. ஈசுவரமூர்த்தி தமது வாழ்வியல் செய்திகளை மையமாகக் கொண்டு தன்வரலாறு நூலைப் படைத்துள்ளார். அந்த நூலின் பெயர் எனது உலகம் எனது உலகியல் உண்மைகள் என்பதாகும். அந்த நூலில் ஏழை,எளிய மக்களின் சிக்கல்கள், கலாச்சாரம், சடங்கு, நம்பிக்கை ஆகியவற்றினால் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிச் சிந்தித்தும் அதனை உடைத்தும் மறுத்தும் அத்தோடு இல்லாமல் மக்கள் முன்னேற்றத்திற்கான மறுமலர்ச்சி சிந்தனைகளைத் தமது கவிதைகளில் எங்ஙனம் வெளிபடுத்தியுள்ளார் என்பதை ஆராய்ந்து முன்வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

படைப்பும்  சிந்தனைகளும்

நா.வானமாமலை”ஒரு சமூகப் பண்பாட்டில் முற்போக்கு என எண்ணப்படுவது வேறு ஒரு சமுதாயத்திலும் பண்பாட்டிலும் பிற்போக்காகவும் இருக்கலாம்”(இரா.காமராசு, நா,வா,நூல் தொகுப்பு, இக்கால இலக்கியம், ப.495) என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு முற்போக்கு எழுத்தாளன் எவ்வாறு தமது எழுத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை வல்லிக்கண்ணன், “எதையும் எப்படியும் எழுதலாம் என்ற வாதம் நடைமுறையில் பத்தாம்பசலிக் கருத்துகளையும் மூடநம்பிகைகளையும் பயத்தையும் தோல்வி மன்பான்மையும் அவநம்பிக்கைகளையும் வேரூன்றச் செய்யவே உதவும். எழுத்தாளன் எதை எப்படி எழுதவேண்டும்?” என்ற கேள்வியுடன் இணைந்ததுதான். எழுத்தாளர் சிலருடைய நன்மைக்காக அல்ல, பலருடைய எதிர்காலத்திற்காக எழுதவேண்டும்”(மேலது) என்று குறிப்பிடுவதிலிருந்து நா.வா., வல்லிக்கண்ணன் ஆகிய இலக்கியவாதிகளின் கூற்றுப்படி முற்போக்குச் சிந்தனைகள் எப்படி எழுத வேண்டும் என்பது இதன் வழி தெளிவாகப் புலப்படுகின்றது.

ஏழை மக்கள் பற்றிய மறுமலர்ச்சி சிந்தனை

இந்திய நாட்டில் உள்ள வறுமை, பிணி, அறியாமையில் வாழ்கின்ற கடைகோடி மக்களுக்காக வருத்தப்பட்டு திருவிவிலியத்தில் கேட்கப்பட்ட கேள்வியின் தன்மையை மையமாகக் கொண்டு, ”இருபத்து நூற்றாண்டுகள் உலகு காணாத செல்வ வளர்ச்சி இன்று! வறுமை, பினி, அறியாமை அதிகம்! செல்வம் பரவவில்லை! கடைசி மனிதன் கடைத்தேறுவது என்று பைபிள் கேள்வி! இதற்கு விடை இதோ; இந்த நூற்றாண்டில் இது சாத்தியம்! இதை அறியாது வாழ்வதில் என்ன சிறப்பு? அறியாதத் தலைவர்களை நாடு மறக்கும்”(வ.ஈசுவரமூர்த்தி, எனது உலகம் எனது உலகியல் எனது உண்மைகள்,ப.163)

தமது படைப்பில் விவிலியத்தில் கடைகோடி மக்களுக்காகக் கேட்கப்பட்ட வினாவிற்கு விடை அளிக்கும் முறையில் நடைபெறுகிற தேர்தல் முறைதான் கடை ஆயுதம் என்று குறிப்பிடுகின்றார். இந் நிலைக்கு விடையாக,“இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலே நல்ல சாட்சி! மனசாட்சி வென்றது. வென்றே தீரும் என்பது பைபிள் பாடம். ஜனநாயகம் கடைசி மனிதனின் ஆயுதம்(மேலது) என்பதிலிருந்தே நூலாசிரியர் கடைகோடி மக்கள் வெற்றிபெறுவதற்கு ஒரேவழி இந்திய நாட்டில் நடக்கும் தேர்தலின் வெற்றியைக் குறிப்பிடுகின்றார்.

கடவுள் பற்றிய சிந்தனை

”படித்தவர் கடவுள் பாமரர் கடவுள் பல என்பது சாலும்! உருவம் உள்ள கடவுள்! உருவமில்லாக் கடவுள்! மனிதரே கடவுள் என்றும் காலம்! (வ.ஈசுவரமூர்த்தி,மு.கு.நூ.ப.65) என்று கடவுள் நம்பிகை உள்ளோரை இருவகைப்படுத்துகிறார். 1.படித்தவர் கடவுள். படிக்காதவர் கடவுள். இந்த கடவுள் சிந்தனைகள் பற்றி தே. லூர்து என்பார், “சமூகத்தின் அடித்தளத்து மக்கள் (subaltern) வழிபடும் கடவுளரைச் சிறுதெய்வங்கள் என்றும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்திருப்பதாகத் தெரிகிறது” என்கிறார்.

இந்தப் பெருந்தெய்வம், சிறுதெய்வம் என்ற வகைப்பாடு பற்றி ஆ.சிவ சுப்பிரமணியன் குறிப்பிடும்போது,“ நிறுவனச் சமயத்திற்குள் அடங்கும் சைவ, வைணவச் சமயங்களில் இடம்பெறும் தெய்வங்களைப் பெருந்தெய்வம் என்றும் ஏனைய தெய்வங்களைச் சிறுதெய்வம் என்று அழைப்பது தற்செயலாகத் தோன்றியதல்ல. இவ்விரு சொற்களும் ஒருவித மேலாதிக்கச் சிந்தனையின் அடிப்படையிலே உருவாகியுள்ளன”(நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள், ப.401) என்றும் மேலும், “அடுத்துள்ள மக்கள் வணங்கும் மாடன், காடன், மாரி, பிடாரி போன்ற தெய்வங்கள் சிறுமையானவை என்ற பொருளில் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகின்றன” (மு.நூ.ப.) என்பதிலிருந்து பெருந்தெய்வங்கள் எல்லாம் மேலாதிக்கச் சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு. இக் கருத்திற்கு வலுசேர்ப்பதாக, தமிழர் மதம் என்ற நூலின் ஆசிரியரான தேவநேயன் வேதகால நிலையில் கடவுள் பற்றி குறிப்பிடும்போது, “ வேதகால ஆரிய தெய்வ நிலைகளில் எல்லாத் தெய்வங்களும் சிறு தெய்வ நிலையின”(ப.67) என்ற செய்தியின் அடிப்படையில் ஆரிய தெய்வங்கள் எல்லாம் சிறுதெய்வம்தான் என்பது புலனாகிறது. நூலாசிரியரின் கூற்றுப்படி படித்தவர் கடவுள் என்பது பெருந்தெய்வத்தையும் படிக்காதவர் கடவுள் என்று சிறுதெய்வம் என்பது நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் எடுத்துரைக்கப்படுகின்றது.

கடவுளின் தன்மையில் உருவம் உள்ள கடவுள் என்றும் உருவமில்லாக் கடவுள் மற்றும் மனிதரே கடவுள் என்று குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போது, உருவம் உள்ள கடவுள் என்பது மேலே கண்ட சிறுதெய்வ, பெருந்தெய்வத்தைக் குறிக்கும். ஆனால் உருவமில்லா கடவுள் என்பது கிறித்தவம், இஸ்லாம் போன்ற சமயங்களில் உருவமில்லா வழிபாட்டை மேற்கொள்ளும் வழக்கம் இன்றளவும் உண்டு. கிறித்தவத்தில் உரோமன் கத்தோலிக்கர்கள் வழிபாட்டில் உருவங்களை வைத்திருப்பர். ஆனால் சீர்திருத்தக் கிறித்தவர்கள் உருவ வழிபாடு கூடாது என்று உருவமில்லா நிலையில் கடவுள் உள்ளார் என்னும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றனர். இதைப்போலவே இஸ்லாமியர்களும் தங்களின் வழிபாட்டு முறையில் உருவமில்லாத வழிபாட்டை மேற்கொள்கின்றனர். மனிதரே கடவுள் என்று காணப்படும் வரிகளை நோக்கும்போது, இந்தியத் திருநாட்டில் எத்தனையோ வகையான கடவுள் கோட்பாடுகள் இருக்கும்போது, இந் நாட்டில் உள்ளவர்களில் சிலர் மகான்களாக வாழும்போது கடவுளாகவே போற்றுகின்றனர். சீரடிசாய்பாபா, புட்டப்பருத்தி சாய்பாபா, பகவான் ரஜினிஷ், மேலமருவத்தூர் அம்மா போன்றார்கள் மனிதர்களே! ஆயினும் சில குழுவினர்களால் கடவுளாகவே கடவுள் அவதாரமாகவே வழிபடப் பெறுகின்றனர்.

இந்நிலையைத் தொடர்ந்து கடவுள் கொள்கையைக் குறிப்பிடும்போது,“கடவுள் பற்றிய பேச்சு, ஆராய்ச்சி, தனித்தியானம் எல்லாம் அவரவர் கல்வி, கேள்வி, உலகியல் பொறுத்தே அமையும்(வ.ஈசுவரமூர்த்தி.ப.65) என்று குறிப்பிட்டுள்ள படைப்பாளரின் உரைவீச்சில் படித்தவர் கடவுள், படிக்காதவர் கடவுள், உருவம் உள்ள கடவுள், உருவமில்லா கடவுள், மனிதரே கடவுள் பற்றிய கொள்கைகள் அவரவர் படித்த நிலையிலும் கேள்வி ஞானத்தாலும் உலகியல் அறிவினாலும் நம்பிக்கை கொண்டவாறு அமையும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என்பது புலனாகிறது.

சடங்கு

சடங்குகள் செய்வதே ஒருவகையான கடவுள் வழிபாடுதான்(வ.ஈசுவரமூர்த்தி, ப.65) சடங்கு என்பது பற்றி பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் தரும் விளக்கம் “மக்கள் பின்பற்றப்படும் வணக்கத்துக்கான வெவ்வேறு முறைகள் அல்லது அவற்றின் தொகுப்பு”(தொகுதி-3,ப.76) மேலும், சடங்கு என்பதற்குப் பக்தவத்சல பாரதி,“புனிதத் தன்மை என்னும் பிரம்மையைத் தோற்றுவித்து அதன் மூலம சமயம் என்னும் முறையை ஏற்படுத்திய நிகழ்வில் இரண்டாம் கட்டமாகச் சடங்குகள் (Rituals) ஏற்பட்டன(பண்பாட்டு மானிடவியல், ப.24) என்று குறிப்பிடுவதிலிருந்து மேலே கண்ட இரண்டு விளக்கங்களும் சடங்கு என்பது வழிப்பாட்டு முறையின் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டுள்ள செயல்பாடுகளாக்க் கருதப்படுகின்றன. ஆனால் கவிஞர் வ.ஈசுவமூர்த்தியின் இந்த சடங்கு செய்யும் முறைககளைக் கடவுளை வழிபடும் ஒன்றாகவே கருதுகின்றார். சடங்கு ஒரு புனிதத் தன்மையை வெளிப்படுத்தியும், வேறுசில செயல்களுக்காகவும், வழிபாட்டு முறையைப் பாதுகாப்பது என்று கூறி கடவுள் வழிபாடு என்பது மக்களின் கல்வி கற்ற நிலையைப் பொருத்தே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக,

கவிஞர் வ.ஈசுவரமூர்த்தி தமது நூலில் மக்கள் நாயகம், கடவுள், வழிபாட்டு முறை, நம்பிக்கை, சடங்குகள் போன்ற நிலையில் எப்படிப்பட்ட மறுமலர்ச்சி சிந்தனைகள் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமை தெளிவாகப் புலப்படுகிறது.

 

Series Navigation100- ஆவது கவனக மற்றும் நினைவாற்றல் கலை நிகழ்ச்சிபடிமை திரைப்பட பயிற்சி இயக்கம் – மாணவர் சேர்க்கை.இலங்கைசூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானதுஒரு விஞ்ஞான இஸ்லாமியர், மூன்று மெஞ்ஞான இந்துக்கள், ஒரு மெஞ்ஞான் கிறிஸ்துவர் & மேற்கு தொடர்ச்சி மலை.எளிமையும் எதார்த்தமும் கலந்த வளவ துரையனின் “சின்னசாமியின் கதை”டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27மஹாகவிதை இலக்கிய இதழ் நடத்தும் பாரதி விழாகிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 35நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3திண்ணையின் இலக்கியத் தடம் -11குப்புரகசியம் பேசுதல் – ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரைபிராயசித்தம்கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 11 காண்டவ வனம்பம்ப்La Vie en Rose (பிரான்ஸ், இயக்குநர் – ஒலிவியர் டஹன்)சீதாயணம் நாடகம் -9 படக்கதை -9ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *