கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)

Spread the love

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

 

 

“எங்கு நீ இனிதாக வசிப்பாய் ?”

என்று நான் வினவினேன்.

“அரண்மனை வசிப்பே

சிறந்தது” என்று நீ

அளித்தாய் பதில்.

“அங்கென்ன அதிசயம் கண்டாய் ?”

“பல்வேறு விந்தைகள்

பார்த்தேன்,” என்றாய் !

“பிறகு ஏன் நீ

வருத்த மோடு தனித்துள்ளாய் ?”

“ஏனெனில்

இந்தப் பகட்டு வாழ்க்கை

காணாமல் போகும்

கணப் பொழுதில் !”

 

++++++++++++

 

“யாரவற்றை நீக்குவர் கூறிடு !”

“தீர்மானச் செயல்களில்

நேர்வழி தவறலாம் !”

“பாது காப்பாய் வேறெங்கு நீ

பதுங்கிக் கொள்வாய் ?”

“பணிவில்

சரண் அடைவதில் கிட்டும்..”

“ஈதென்ன

விட்டுக் கொடுப்பு ?”

“சமாதான உடன்பாடு எனக்குப்

பாதுகாப் பளிப்பது.”

 

++++++++++++

 

“அபாயம் நெருங்கும் என்றுனக்கு

அச்சம் வந்தி லையோ ?”

காதல் வாழ்வில்

“தெருவில் தெரியும் பயமே

என்னைச் சிறுமைப் படுத்தும்.”

“எப்படி அங்கு நீ

இராப் பகலாய் நடக்கிறாய் ?”

“ஒழுங் காகவே தெருவில்

உலவி வருகிறேன்.

ஆயினும் எனக்கு அச்சமே !”

 

+++++++++++

 

பேரமைதியில் இப்போது

ஊரடங்கி வருகிறது !

யாரும் நின்று கேளாது

வேகமாய் நகர்ந்து செல்வார்

இப்பேச்சை

இன்னும் நான் தொடர்ந்தால் !

கூரை போய் விடும் !

சாளரம் மூடும் !

கதவும் தாழிடப் படும் நான்

கதை அளந்தால் !

 

 

***************

தகவல் :

 

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

 

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

 

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

 

3. Life of Rumi in Wikipedia

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 31, 2011)

 

 

Series Navigationதரிசனம்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)