கவிதைகள்

ஆ.மகராஜன்
நாளைய நிழல்?
++++++++++++++
உக்கிரமாய்த் தகிக்கும்
உச்சி வெயிலில்
நிழல்தர இன்னமும்
மிச்சமிருக்கின்றன
நேற்றைய மனிதர்களின் மரங்கள் ..
பாவம்..நாளைய மனிதர்கள்…!
தவிக்கும் வேதாளம்
++++++++++++++++++
இறங்கிய வேதாளம்
மீண்டும் ஏறிக்கொள்ள
தன் மரத்தைக் காணாமல்
தவிக்கிறது..
இடைப்பட்ட நேரத்தில் அதையும்
யாரோ வெட்டிச் சாய்த்து விட்டதால்..
                 – ஆ.மகராஜன், திருச்சி.
Series Navigationதொடுவானம் 172. புது இல்லம்நினைவில் உதிர்தல்