கவிதை

மு.ரமேஷ்

பறவை ஒன்றை கைவிட்ட துயரத்தில்

புகையின் காதை திரிகி இழுத்து கொண்டு வானிலேறும் காற்று

ஊரை எரித்தவனின் முகத்துக்கு முன்னால்

தனது மயிற் கற்றையிலிருந்து ஒன்றை உதிற்த்துவிட்டு

கீழிரங்கும் சிறகு

 

எனது நிழலும் நீக்கப்பட்ட வண்ணமும்

வனப்பும் இழந்த

பழுப்பேறிய கவிதையை ப்

பரிசலித்தது நீ

என்பதை யாரிடம் சொல்ல

எல்லாம் நீங்களாக இருக்கிறபோது

 

ஆமாம்

இப்போதும் பார்த்துகொண்டேயிருக்கிறேன்

அந்தத் தொலைகாட்சி விளம்பரத்தை

அடர்நிறம் கொண்ட அது குறித்து

வெளுத்துக்கட்டுகிறாய்

என் உயிரினும் மேலான ………. என்று

வணக்கம் என்கிறேன்

ஹலோ என்கிறாய்

காட்சிக்கும் பேச்சிக்கும் இடையில்

ஆசறு நல்ல, நல்ல

என்று இருந்தால்

இன்னும் படுஜோராக இருந்திருக்கும்

 

நாம் நாமாக இருந்த

அந்த ஆதி சொல்லை

தொலைத்துவிட்டேன்.

 

Series Navigation