கவிதை

Spread the love
முல்லைஅமுதன்
காயம்படாமல் பார்த்துக்கொள்
உன் விரல்களை..
தேவைப்படலாம்.
யாரையாவது விழிக்க..
உன் பிள்ளையை
அழைக்க..
கட்டளையிட.
அடிபணியா வாழ்விது
என…
புள்ளடியிடவென
உன் விரல்களை
வாடகைக்குக் கேட்கலாம்
மறுத்தால்
விரல்களையே
தறிக்கலாம்.
காலம்
ஒருநாள் கட்டளையிடலாம்
விசைகளை அழுத்த…
விரல்களை
காயம்படாமல்
பார்த்துக்கொள்.
Series Navigation” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளதுஇலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!