கவிதை

Spread the love

சுரேஷ்மணியன்

கடைகள் நிறைந்த சந்தை களைந்து வீதியொன்றின் முடுக்கில் ஊளையிடும் நாயின் ஓசையின் துணையோடு கழியும் இரவின் நிசப்தம் போல மாணவரின்றி வெறுமையாய் காட்சிதரும் வகுப்பறைகள் எழுத ஆளின்றி வெறுமையாய்,கருமையாய் காத்திருக்கும் கரும்பலகைகள் தன்மீது கிறுக்கும் சினேகிதனின்றி ஏங்கித்தவிக்கும்கொள்ளையழகு தரும்  வெள்ளைச்சுவர்கள் தன் கரம் பற்ற துணையின்றி புலம்பித் தலும்பும் ஜன்னல் கம்பிகள் இராவணத் தம்பிகளின் கால்துகள் கதுவக் காத்திருக்கும் அகலிகை பெஞ்சுகள் சுற்றாமல் தலைகுனிந்து தரைபார்த்திருக்கும் காற்றாடிகள் இவ்வாறே காலம் கழிக்கிறது கொரோனாவில் வகுப்பறைகள்.  _ M 

Series Navigationநிர்மலன் VS அக்சரா – சிறுகதை‘ஆறு’ பக்க கதை