காணாமல் போனவர்கள்

Spread the love

மரத்தில்
தன்னந்தனியாய்
அழகான
ஒரு பறவையைப்
பார்த்தேன்.
முகமலர அதோடு
ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்த
நிலவையும் பார்த்தேன்.

எதிர்பாராமல்
ஒரு மின்னல்
கிழித்த துணியாய்
மேகத்தை கிழிக்க…

பேரிடி முழங்கியது.
பெருமழை பெய்தது.
பேசிக் கொண்டிருந்த
பறவையையும்
காணவில்லை.
நிலவையும்
காணவில்லை.
எங்கே போனதோ
அவைகள்.

Series Navigationபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநிஅவன் …அவள் ..அது ..