காதலும்கவிதையும்

Spread the love

ரோகிணிகனகராஜ்

காதலன் கரம் பற்றி

வளைய வரும் காதலியென

என் கைபிடித்து என்னை

மலையுச்சிக்குக் கூட்டிச்

சென்றது ,வாழ்வின் விரக்தி… 

கீழே பார்த்தபோது, 

பாறைகளின் படுக்கை

விரித்து மரணப் பெண்

என்னை வா வாவென

அழைத்தாள்… 

குதிப்பதற்கு முன்

மலையுடன்  ஓர் ஒத்திகை… 

உன்பெயரென்ன? 

மலையும் திரும்பக் கேட்டது… 

நீ ரொம்ப அழகு! 

மலை திரும்ப மூன்றுமுறை

அதையே கூறிற்று… 

நான் உன்னைக்

காதலிக்கிறேன்! மலையும்

திரும்ப மூன்றுமுறை

நான் உன்னை காதலிக்கிறேன் என்றது… 

என் விரக்தியை

மரணப் பெண்ணுக்கு

இரையாக்கிவிட்டு

இப்போது நான்அரங்கேற்றம்

செய்யத் தொடங்கினேன்

மலை மீதான என்

காதலையும் கொஞ்சம்

கவிதைகளையும்… 

Series Navigationதிருப்பம்…எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு