காத்திருக்கிறேன்

என்றாவது வரும் மழைக்காக
அன்றாடம் காத்திருப்பது
நிரந்தரமானது
வாழத் தவிக்கும் மரத்திற்கு
ஞாபக வேர்கள்
நீரைத் தேடுவதற்கும் திராணியற்று
முடங்கிப்போக வேண்டியதாகிறது
உங்களது உறவின் வெளிச்சத்தில்
வளர்ந்த எனது நட்பின் கிளைகள்
இலையுதிர் காலத்தை சந்திக்கிறது

கடந்த காலங்களில் பதித்த
தடங்களை தடவிப் பார்க்கவும்.,
தொலைந்துபோன நட்பின்
சிறகுகளை தேடிப் பார்க்கவும்
வாழ்க்கை வானில் கவிழ்ந்த
சோக இருளைத் துடைக்க
மனப்பகிர்வு மின்னலை
வெளிப்படுத்தவும்
வாய்ப்பு வருமென காத்திருக்கிறேன்
காலம் காட்டிய திசையில்
காற்றெனப் பறந்த
உங்களின் வியர்வை துடைக்க
நூறு கரம் நீட்டிக் காத்திருக்கிறேன்
மீண்டும் எனது உணர்வுகள்
துளிர்க்க வசந்தமென வருவீர்கள்
என்ற நம்பிக்கையுடன்.

Series Navigationஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)