காத்திருப்பு

Spread the loveஉள்ளிருந்து கொண்டு

என் கவிதை

வெளிவர மறுக்கிறது.

குழந்தைக்குத் சோறூட்டும்

தாய் போலக்

கெஞ்சிக் கூப்பிடுகிறேன்.

ஈக்களை விரட்டுவதுபோல

மிரட்டியும் அழைக்கிறேன்.

வருவது போல வந்து 

பெய்யாமல் போகும்

மழைபோலக் கண்ணா மூச்சி

ஆட்டம் ஆடுகிறது.

சொற்களெல்லாம் வந்துவிட்டுக்

காத்துக்காத்து

மேய்ப்பரில்லா ஆடுகள்

போலத் தவிக்கின்றன.

உவமைகளும்

உள்ளுக்குள்ளேயே அழுகின்றன.

பிளவுக்கு வெளியில்

தலையைக் காட்டி

உள்ளே இழுத்துக்கொள்ளும்

நீர்ப்பாம்பாய் அது இன்னும்

வந்தும் வராததுமாய்

மறைந்து சிரிக்கிறது.

பொறுமையாக நூலிழை

எத்தனை முறை

அறுந்தாலும் பின்னும்

சிலந்தியாய் நான் இருக்கிறேன்

ஒரே ஒரு தீக்குச்சிபோதும்

அந்தக் கவிதை வெடித்துச் சிதற

அதற்குக் காத்திருக்கிறேன்Series Navigationஅறுந்த செருப்புபுல்வாமா