காமம் பெரிதெனினும் கடந்து நில்

Spread the love

மஞ்சுளா

பச்சை இளநீர் காய்களை
விற்பவன் போல்
தேடியலைகிறாய்

உன் மனவோட்டங்களில்
எந்தத் தடையுமின்றி
பதியும் வார்த்தைகளை
அவ்வப்போது தெருவோரங்களில்
வீசி எறிகிறாய்

புழுதி படரும்
உன் சுவாசங்களை
அறிந்து
விலகியே நிற்கிறது
சாலையோரத்து
மரங்கள்

பறவைக் குஞ்சுகள்
கரகரத்து பாடுகின்றன

பிறிதொரு நாள்…

என் வாசலில் நின்றழும்
பெண்ணிடமிருந்து வருகிறது
உன் கண்களாலும்
உடலாலும்
உறிஞ்சப்பட்ட காமம்

              --- மஞ்சுளா 

Series Navigationகொடும்பம்நிலை கெட்ட மனிதரை