காமம்

எப்பொழுதாவது என்னில் உறைந்த சில பொழுதுகளை

பாசியென அடர்ந்திருகி விட்ட சில நியாபகங்களை

சாத்தானாய் மெல்ல என் உடல் பற்றி வெளியேற

அவள் தம் பிழிகளின் வியே தூபம் காட்டிக் கொண்டிருப்பாள்

நிசி நேர ஓர் புகை மூட்ட கனவைப் போன்றும்

கனவுத் தூதுவனொருவனின் பாஷையறியா

காதோர சில முனுமுனுப்புகளைப் போன்றும்

தன் அங்க அசைவுகள் வழியே விளங்காதொரு

பிம்பங்களற்ற மாய தோற்றங்களை இலகுவாய்

என் சுற்றிக் கட்டி முடித்திருப்பாள்

காமம் பெருகி

கனவுகளில் வடிந்த வியர்வையில் குளித்து

விரசம் கிளர்ந்து திமிறி நிற்கையில்

சட்டென மாயைகள் அறுத்து

காற்றினில் கரைந்திட்ட மாய தோற்றங்கள் வழியே

தன்னையும் ஒளித்து விட்டிருப்பாள்

பின்னரும் ஏற்றதொரு நிராசையில்

கனவுகள் காய்ந்து விரசம் சூம்பிக் கிடக்கும் ஓர் வேளை

இனியொருதரம் ஏதுமற்று முன்னே களைந்த பொழுதுகளை

மீண்டும் அவள் தம் விழி வழியே

தூபம் காட்ட விழைவாள் இன்னொரு முறையும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9கவிதை கொண்டு வரும் நண்பன்