காரணங்கள் தீர்வதில்லை

சேயோன் யாழ்வேந்தன்

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை
அப்பா வீட்டில் இருந்தார்
விருந்தினர்கள் வந்திருந்தார்கள்
பலகாரம் செய்துகொண்டிருந்தேன்…
வெய்யில் மண்டையைப் பிளந்தது
மழை வரும் போலிருந்தது
காரணங்கள் தீர்ந்தாபாடில்லை.
எளிதாய்க் கிடைக்கும் காரணங்கள் இல்லையென்றால்
மிகவும் சிரமப்பட்டுத்தான் போயிருப்பாய்.
வாராததற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும்
காத்திருந்ததற்குக் காரணம் ஒன்றுதான்.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்மரத்துடன் மனங்கள்