காற்றில்லாத கடற்கரை

 

ஆதியோகி

 
கடலை வரைந்தாயிற்று
அலையை வரைந்தாயிற்று
காலைத் தழுவிய அலையில்
முகம் சிலிர்த்த சிறுவனின்
உணர்வையும் கூட வரைந்தாயிற்று.
உப்பு நீரின் ஈரம் சுமந்து
வீசும் இந்த காற்றை
எப்படி வரைவது…?
உப்பு நீரின் ஈரம் சுமந்து
வீசும் அந்த காற்றில்லாத
கடற்கரைக்கு யார் வருவார்கள்?
                                 – ஆதியோகி
 
Series Navigationகவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்அன்பு வழியும்  அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரை