காலம்….!

ஜெயஸ்ரீ ஷங்கர்.

வாழ்க்கையை
உழும்…
காலம்..!
————————
தன்னை
யாரெனக்
உணர்த்திடும்
காலம்..!
————————-
பூமியை
சிக்க வைத்த
சக்கரம்..!
காலம்..!
—————————

இன்று…!
என்பதை
நேற்றாக
மாற்றும்
காலம்..!
—————————–
பூமி கடந்து
சென்ற பாதை
காலம்.

——————————
கலி முத்தியதால்…
அலங்கோலமாய்
சிரித்தது…
காலம்..!
—————————-
விதைத்ததை
அள்ளிக்
கொடுத்தது
காலம்..!
——————————
காலன்
பார்ப்பதில்லை
காலம்..!
——————————
மன ரணத்தை
ஆற்றிடும்
அருமருந்து
காலம்..!
—————————–
கருவை
வளர்த்து
கிழமாக்கும்
காலம்..!
——————————
கேள்வியும்
கேட்கும்
பதிலும்
சொல்லும்
காலம்..!
————————-
ஒளியை
இருளாக்கும்..
இருளை…
நிலவாக்கும்…
காலம்..!
—————————–

உயிரைப்
போலவே
ஆட்டிப் படைக்கும்
காலம்..!
——————————
மாயையாய்
மேடையில்
அரங்கேறும்
மாயாவி
காலம்..!
————————————
வந்ததும்
வருவதும்
மனதை ஆள..
உறங்குகிறது
நிகழ் காலம்…!
————————————–
கடந்த நினைவுகளை
பெட்டகத்தில்
சேமித்தது…
காலம்..!
————————————-
தொலைந்து
போனதாக
மனது அழுதது..
காலம்..!
————————————–
கடந்த
காலங்களை
மட்டுமே
பேச- இந்தக்
காலம்..!
—————————————
சம்சார சாகரத்
தூண்டிலில்
மாட்டிக் கொண்டது
காலச் சக்கரம்..!

==================

Series Navigationதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறுகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!