காலைப் புகை!

Spread the love

 

ஜெய்கிஷென் ஜே காம‌த்.

அதிகாலை 3:25  நான் இன்னும் விழித்திருக்கிறேன். கணினி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நினைவகம், நுண்செயலி

மற்றும் புற சாதனங்கள். கணினி அமைப்பில் எனக்கு விதித்த‌ நியமனங்கள் என்னைக் கொன்றது. அது ஒரு குளிர்ந்த‌ இரவு, மழை

இப்பொழ்து நின்று விட்டது. பழைய பீட்டில்ஸ் பாடல், “இது ஒரு கடின தின இரவு, நான் ஒரு கட்டை போன்ற தூங‌க வேண்டும்” என்

மனதில் இசைத்தது. என் மூளையில் உள்ளீடு தரவுக்கு மட்டுமே நான் ஒரு சாதனத்தை வைத்திருந்தால், எவ்வளவு எளிதாய் இருந்திருக்கும்.

 

காலை 5:12  இறுதியாக என் பணியை முடித்துவிட்டேன், ஆனால் இப்போது 4 மணி நேரத்திற்குள் இதை நான் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

எனக்கு தூக்கம் வரவில்லை. என் வகுப்பறையின் முன் வரிசையில் ஒவ்வொரு மாணவனுக்கும் என் பேராசிரியர் உமிழ்நீர் சாரலாய் …….

“எல்லா வேலைகளும் (… சாரல் … சாரல் …) சமர்ப்பிக்க வேண்டும்.(… சாரல் …. சாரல் …) என் மேசை மீது நாளை காலை 9:15 க்குள் ……. “.

ஒவ்வொரு முறையும் என் பேராசிரியர் ஒரு “ச‌” ஒலி ஒன்றை உருவாக்க வேண்டும், அது மிகவும் வெயில் நாளில் கூட ஒரு குடையினை

அனைவரையும் தேட செய்யும். நான் காலை வரை விழித்திருக்க ஒரே ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு குவளை குழம்பி.

 

ச‌ங்கரன் செட்ட‌ன் (மூத்த சகோதரர்), ஒரு சிறிய கரிய‌ மனிதன்.எனக்கு கோயம்புத்தூரில் தெரிந்த ஒரெ மலையாளி. ஒரு தேநீர்

விற்பனையாளர்.காலையில் 4:00 மணியளவில் அவர் பணி தொடங்கும்  அவரால் எப்படி இவ்வளவு காலயில் கடை திறக்க முடிகிற்து

என்று எப்பொழுதும் யோசிப்பேன். நான்கு இடுப்புயர்  சக்கரங்கள் மீது ஒரு பெரிய செவ்வக மரப் பலகை. இந்த பலகையின் இருபுறமும்

இரண்டு விசைகள் இருந்தன. திசைகளை மாற்றுவதற்கு ஒன்று, ஒட்டத்தை தடை செய்ய‌ ஒன்று. இரண்டு சமையல் அடுப்புகள், ஒரு எரிவாயு

சிலிண்டர், நிறைய தட்டு முட்டு சாமான்க‌ள், காகித கப் மற்றும் ஒரு டச‌ன் பிளாஸ்டிக் முக்காலிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த‌து கடை.

அவர் முக்காலிகளை சுற்றி வைப்பதைப் பார்த்தேன். அவரது அடுப்பில் தீ ஏற்கனவே மூட்டப் பட்டு இருந்தன. தேநீர் மற்றும் காபிக்காக‌ பால்

ஒரு அடுப்பில் கொதிக்கும் நிலையில் இருந்தது. பக்கதில் சுடசுட சமோசாக்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. நான் ஒரு முக்காலியில்

உட்கார்ந்தேன், அப்போதுதான் அவரை பார்த்தேன்.

 

அவர் 75 அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மிகவும் மெலிய, உயரமான ஆனால் சிறிது வளைந்த தேகத்துடனும் இருந்தார்.

மெதுவாக மற்றும் அமைதியாக நடந்து வந்தார்.  அவரது தளர்வான சட்டை மற்றும் பேண்ட் வைகோல்  மனிதனை நினைவு படுத்தியது. அவர்

தடிமனான குவிந்த லென்ஸுடன் ஒரு பெரிய கண்ணாடியை அணிந்திருந்தார். அவர் தனது பாக்கெட்டில் ஒரு தோல் பை வைத்திருந்தார்,

அதில் “IYER” என்று எழுதப்பட்டிருந்தது. முகம் மற்றும் தொண்டை முழுவதும் சுருக்கங்கள். அவரது தோல் அவரது கை எலும்புகளில்

தொங்கியது. அவரது விரல்கள் வளைந்து சுருண்டு கிடந்தன. நான் உட்கார்ந்திருந்த முக்காலியில் வெகு அருகில் அவர் உட்கார வந்த பொது,

நான் மெதுவாக ஒதுங்கி நின்று, “உக்காருஙக”, என் மனதில் அவரது வயதைக் கருதுகிறேன். அவர் என்னை பார்து ஒரு புன்னகையுடன் சொன்னார்,

“இவ்வள‌வு மரியாதை ….. எப்படி?” நான் மீண்டும் புன்னகைத்தேன். அவர் தேநீர் கேட்டார், மெதுவாக ஒரு சிகரெட்டை எடுத்து அதை பற்ற

வைத்தார். அவர் தனது சிகரெட்டை விரல்களுக்கு நடுவே சிகரெட்டை சிரமத்துடன் பிடித்துக் கொண்டார்.

 

அவர் உட்கார்ந்த  உடன் , ஒரு கடுமை அவரது முகம் கொண்டது. அவரது புன்னகை முற்றிலும் மறைந்துவிட்டது. அவரது புருவங்களை சுற்றி

நெற்றியில் இன்னும் சுருக்கங்கள் கொண்டு நெருக்கமாக வந்தது. அவர் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கோபமாகவும்

சோகமாகவும் இருந்தார். காலையில் எது இந்த கோபத்தை உண்டாக்கி இருக்கும் என்று வியந்தேன். நான் அவரது விரல்களில் சுட்ட‌

அடையாளங்களை கவனித்தேன். அவர் புகைபிடித்த சிகரெட்டுகளால் ஏற்பட்ட‌ தீக்காயங்கள். திரு ஐயர் பற்றி ஏதோ ஒன்று பிடிபட‌வில்லை.

முதல் பார்வையில் யாராவது அவரது வயது பைத்தியத்திற்க்கு பின்னால் உள்ள காரணம் என்று நினைக்க கூடும். ஆனால் அப்படி இருந்திருந்தால்,

அவர் சிரிக்க மாட்டார். எல்லா நேரத்திலும் கோபமாக இருப்பார்.

 

அவர் தனது தேநீர் கோப்பையை சப்பி குடிக்கையில், நான் அவரது பிரச்சினைகளை பற்றி கேட்கலம் என்று நினைத்தேன். ஒருவேளை அவர்

பகிர்ந்து கொள்ளலாம், அது கொஞ்ச‌ம் அவரின்  மனதை  லேசாக்கலாம். “ஐயா …. நீஙகள்  ஏதற்காக‌ புகைக்கிறிர்கள்?” நான் அவரிடம் கேட்டேன்.

உன் வேலையை பார் என்று அவர் சொல்ல நான் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் என் ஆச்சரியத்திற்கு அவர் என்னைக் கண்ணில் பார்த்தார்,

“உன‌க்கு உண்மையில் தெரியணுமா?” என்று கேட்டார். நான் நேசதுடன் புன்னகைத்து , “ஏன் கூடாது?” என்றேன்.

“நான் அதை சுருக்கமாக சொல்கிறேன் …. என் மனைவி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான்,

அவனுக்கு ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், அவனுடைய மனைவிக்கு ஏன்னை பிடிக்கவில்லை அதனால் என் மகனும் நானும்

பேசுவதில்லை இந்த நாட்களில் என் மகள் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்து வீட்டிலிருந்து ஓடிவிட்டாள், அன்றுதான் நான் கடைசியாக

அவளைப் பார்த்தேன், இன்று நான் தூங்க போகிறேன், நாளை எழுந்திருக்க மாட்டேன் நாளை எழுப்பக்கூடாது என்று கடவுள் தீர்மானித்தால் “என்று

சொன்னார். அவர் தனது சிகரெட்டை தரையில் போட்டு, அவரது செருப்பால் நசுக்கினார். அவர் தனது கடைசி மடக்கு குடித்துப் பின்னர் அவர்

என்னைப் பார்த்து சிரித்தார், “அன்பு இறந்த‌து! ஒரு சங்கிலி புகைய‌ர் பிறந்தார்”. அவர் ச‌ங்கரன் செட்ட‌னைக் கடந்து சென்று விட்டார். வேறொருவருடைய

வலியைப் பற்றி கவலைப்படுவதற்கும் பிரசினைகளை தீர்க்க எப்பொதும் யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள போதுமான

ஞானமுள்ளவர் என்பதால் அவர் தனது கதையை சுருக்கி விட்டார் என்று நினைக்கிறேன்.

 

நான் மேலும் இரண்டு கோப்பை குழம்பியை குடித்து, என் அறைக்கு மீண்டும் சென்றேன். என் நியமிப்புத் தாள்கள் என் படுக்கைக்கு அருகில் இருந்தன.

நான் அவற்றை சேகரித்து ஒழுங்காக அமைத்து, அவற்றை ஒரு கோப்பில் வைத்து, அதை என் பையில் வைத்தேன்.  என் படுக்கையில் இருந்து என் ஜோடி

காலணிகளை பார்த்தேன். எழுபது வயதில் ஐயரை போல் அதே காலணிகளை நான் அணிந்துகொள்வேனா அல்லது என் குழந்தைகள் என்னை மதிப்போடு

வைத்திருப்பார்களா அல்லது நான் எழுபது வயதில் உயிரோடு இருப்பேனா என்று நினைத்துக் கொண்டே நான் மெதுவாக என் கண்களை

மூடிக்கொண்டேன் ……… ஒரு பீதி தாக்குதல் என்னை எழுப்பும் வரை.

நேரம் காலை 10.15 மணியாக இருந்தது. நான் என் பற்களை தேய்த்து என் துணிகளை மாற்றி, கல்லூரிக்கு தயாராகிவிட்டேன். குளியலைப் பற்றி

கவலைப்படவில்லை. நான் என் குடையை என்னுடன் எடுத்தேன் மழைக்காக‌ இல்லை, அந்த‌ குடை என்னை என் நரக நெருப்பு துப்பும் பேராசிரியரிடமிருந்து

பாதுகாக்கும் என்ற‌ ஒரு சிறிய தைரியம் கொடுத்தது !!!.

 

ஜெய்கிஷென் ஜே காம‌த்.

Series Navigationமாய உலகம்ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017