கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்

தேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், (துர)அதிருஷ்ட வசமாக நாம் எதிர்பார்க்காத  சில அரசியல் ‘ தல ‘ கள், தமிழகத்தின் அரியணையை அலங்கரித்தால் என்னாவாகும் என்று ஒரு ஏடாகூடாமான கற்பனை. இது சிரிப்பு பக்கம்.. நத்திங்  சீரியஸ்!

பசுமாடும் தீவனமும் போல், இணைபிரியாமல் வாழும் லல்லுவும் ராபரியும் ( இந்திப் பெயர்.. ஆங்கிலம் என நினைத்து அதிக கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் அன்பு வாசகர்களே!), தமிழ்நாட்டின் இணை முதல்வர்களாக பங்கேற்கும் கோலாகல திருவிழா, புளியம்பட்டியில், மாடு பிடி திருவிழாவோடு,  அட்டகாசமாக அரங்கேறியது. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து, காளைகளும் கன்றுகளும், பிரம்மாண்ட மைதானத்தை நிறைத்தது கண்கொள்ளாக் காட்சி. ஆவினம் ‘ அம்மா ‘ என்றழைக்க, ராபரி தாய்மை உணர்வுடன் புன்னகை பூத்தது நெஞ்சை விட்டு அகலாது.
தலைமையுரையில் லல்லு “ காய்யோ ( பசுமாடு ) அவுர் கோடோ ( குத்¢ரை ) “ எனத் துவங்கியதைத், தமிழில் தப்பாகப் புரிந்து கொண்ட மாடுகளின் சொந்தக்காரர்கள், அவற்றை அவிழ்த்து வ்¢ட, திட்டமிடாத ஜல்லிக் கட்டு அமர்க்களமாக அரங்கேறியது. ரபரியை நோக்கி வந்த, ஒரு காளையை மேடையிலிருந்து குதித்து, லல்லு அடக்க்¢யது நிகழ்வின் ஹைலைட்.

இனி லல்லுவின் உரையின் சாராம்சம்:

1.    பசுமாடுகளுக்கு என்று ஒரு தனி வாரியம் அமைக்கப்படும். அது முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2.    மெட்ரோ ரெயில் தடம் மற்றும் மெம்பாலங்களில் க்£ழ் இருக்கும் இடங்கள் பசு(மை) புரட்சியைக் கருத்தில் கொண்டு, தீவனப்பயிர்கள் வளர்க்கும் இடமாக மாற்றப் படும்.
3.    அண்ணா சாலையில் மையப் பகுதியின் இருபக்கம் ‘ காய் டிராக் ‘ எனும் மாடுகள் பயணிக்கும் பகுதியாக மாற்றப்படும். இதனால் சுற்றுச்சூழலின் மாசு கட்டுப்படுத்தப்படும்.
4.    வீட்டுக்கொரு மாடு வளர்ப்போம் எனும் திட்டத்த்¢ன் கீழ் ஒவ்வொரு குடும்பத்த்¢ற்கும் ஒரு மாடு இலவசமாக வழங்கப்படும். மாடிருந்தும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, மாட்டிற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் இலவச  வீடு தொழுவத்துடன் வழங்கப்படும்.
5.    இனப்பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியக் காளைகள் இறக்குமதி செய்யப்பட்டு, அவை மூலம் பிறக்கும் கலப்பு மாடுகளுக்கு, இலவச மூக்கணாங்கயிறு தங்க மணிகளுடன் வழங்கப்படும்.
6.    ஏழைகள்,வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு இலவசமாக 20 கிலோ பொட்டும் புண்ணாக்கும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.
முன்னதாக முதல்வர் லல்லு 1000 நபர்களுக்கு இலவச முடி வெட்டும் வைபவத்தை தானே முன்னின்று முடி வெட்டி ஆரம்பித்தார். கூடியிருந்த தொண்டர் கூட்டம் “ முடி வெட்டும் மன்னன் லல்லு “ என்று கோஷமிட்டது அதிரி புதிரி அனுபவம்.
மண் குவளைகளில் தேனிர் வழங்கப்பட்டது. அதை ஆரம்பித்து வைத்த ராபரியின் குடித்து முடித்த குவளையை, லல்லு வாங்கி ஓங்கி தரையில் அடித்து உடைத்தார். “மண் மண்ணோடு சேர்ந்து விட்டது “ அவர் அடித்த ஜோக் பலத்த கரகோஷத்தைப் பெற்றது.
புளியம்பட்டியைச் சுற்றி வந்த லல்லுவின் படை வீரர்கள், கண்ணில் க்¢டைத்த வேப்ப மரத்தையெல்லாம் ஒடித்து மைதானத்தின் ஓரத்தில் குவித்து விட, லல்லு  கம்பீரமாக இறங்கி ஒரு வேப்பங்குச்சியை உடைத்து பல் தேய்த்தார். தொடர்ந்த தொண்டர்களின் தாக்குதலில், வேப்பக் கிளைகள் வெட்டி சாய்க்கப்பட, ஆட்படையின் ‘தேய்த்தல்” ரயிலோசையை ஏற்படுத்தியது.
“ தலிவரை கோல்கேட் ஊழல்லே சம்பந்தப்படுத்தவே முடியாது .. ஏன்னா அவர் அதை பயன்படுத்தறதே இல்லியே “ என்று ஒரு வ்¢சுவாச தொண்டன் அடித்த காமெண்ட் சூப்பர்.
புளியம்பட்டியிலிருந்து ஒற்றை மாட்டு வண்டியில் புறப்பட்ட லல்லு, ராபரி ஜோடி இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை வந்தடைந்தது.
0
அரசியல் கிசுகிசு:

பசுநேசன் ராமராஜன், லல்லுவை ரகசியமாக சந்தித்து பேசியதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமராஜனின் அனைத்துப் படங்களின் டிவிடிகளை, அப்போது அவர் லல்லுவிடம் தந்ததாகவும், செய்திகள் பரவுகின்றன. விரைவில் ராமராஜன் லல்லு கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும், அவருக்கு பசு வாரியத் தலைவர் பதவி வழங்கப்படும் என்றும், பட்சி சொல்கிறது.

நதிகள் இணைப்பு விவகாரத்தில் ,அதிரடி முடிவை முதல்வர் எடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இணைப்புப் பாதையில் இருக்கும் வீடுகளை அரசு எடுத்துக் கொண்டு, அதன் சொந்தக்காரர்களுக்கு அதே பாதையில் ஓடும் நதியில் படகு வீடுகள் அமைத்துத் தர லல்லு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மீனவர் பிரச்சினையில் முடிவு ஏற்பட கச்சத்தீவை மீட்பது. அது சாத்தியமில்லை எனில் நதிகள் இணைப்பில் தொண்டப்படும் மண்ணும், இடிக்கப்படும் கட்டிடங்களின் பயனில்லாத கற்குவியல்களும், இந்திய எல்லையில், கச்சத்தீவு அருகில், கடலில் கொட்டப்பட்டு ஒரு புதிய தீவு உருவாக்கப்படும். அதற்கு சொச்சத்தீவு என்றோ மிச்சத் தீவு என்றோ பெயர் பரிசிலிக்கப்படுவதாக செவிவழி செய்தி கூறுகிறது.

சட்டசபையில் நாற்காலிகள் அகற்றப்படும் என்றும், அதற்கு பதிலாக சாணமிட்ட மண் தரையும் வைக்கோல் பொதிகளும் பரப்பப்படும் என்றும் சொல்லப்படுகிறது. சபை நாயகர் கையில் சுத்தியலுக்கு பதிலாக ஒரு சவுக்கை கொடுக்கவும் அதற்கு வெள்ளிப் பிடி போடவும் லல்லு ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.

ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அறையில் பசுவும் கன்றுமான வெண்கலச் சிலை ஒன்று நிர்மாணிக்க உத்தேசம் உள்ளதாம்.

பிரபல பாடல் ஒன்றின் மெட்டில் “ லல்லுவின் ராஜ்ஜியத்தில் கொய்யலாலா” என்கிற பாட்டு, பட்டி தொட்டியெங்கும் ஒலித்து, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறதாம்.

இசைஞானியைக் கவுரவிக்கும் வகையில் “ செண்பகமே செண்பகமே “ என்கிற பாடல், அனைத்து அரசு விழாக்களிலும் முதலில் ஒலிக்க வேண்டும் என்கிற  உத்திரவில் லல்லு கையெழுத்திட்டு விட்டாராம். நிறைவு பாடலாக “ கோமாதா எங்கள் குலமாதா “ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டாவது குழந்தைக்கு இலவச தொட்டில், மூன்றாவது குழந்தைக்கு இலவச ஆவின் பால் பாட்டில், என்றொரு திட்டம், லல்லுவின் கவனத்தில் இருப்பதாக கதை சொல்லிகள் பரப்பி வருகிறார்கள்.

0
ஒரு மாதத்தில் சென்னையின் உருவமே மாறிப்போய், மேம்பாலங்களும், அதனடியில் ஆளுயர புல் தோட்டங்களும், அதில் மேயும் மாடுகளும் ஒரு கிராம அனுபவத்தை கொடுத்த பரவசத்தில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, தன் அடுத்த பட டைட்டிலாக “குவளையும் கொம்பேறி மூக்கனும் “ என்பதை அறிவித்தார். குவளை நடிக்குமா? என்று கேட்டதற்கு “ குவளை என்பது மலர். அதைப்போன்ற பெண்ணுக்கும், முரடனாக இருக்கும் இளைஞனுக்குமான காதல்தான் கதை “ என்றார்.

0

பசுவின் முனகலை வைத்து, தாம்பத்திய உறவைச் சொன்ன பாக்கியராஜ், தனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாக அவரே கூப்பிட்டு நிருபர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

0

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​