கியூபா சுற்றுலாத்துறை

 

che-jineteraஹினெடேரிஸ்மோ(Jineterismo) என்பது செக்ஸ் சுற்றுலா. ஹினெடெராஸ்(jineteras) என்பது விபச்சாரிகளைச் சுட்டும் சொல். கியூபாவில் சுற்றுலாத்துறையே செக்ஸ் சுற்றுலா என்றால் மிகையாகாது. சுற்றுலாவுக்கென தனி கடற்கரை விடுதிகளை கியூபாவின் கம்யூனிஸ்டு அரசு உருவாக்கியுள்ளது.

இந்தப் பகுதிகளுக்கு அரசாங்க அனுமதியுடன் மட்டுமே கியூப மக்கள் செல்ல முடியும். இங்கே அனுமதி அளிக்கப்படுபவர்கள் இந்தச் சுற்றுலா விடுதிகளில் வேலை செய்பவர்கள் என்று சொன்னாலும், அது மிகப் பெரும்பாலும் விபச்சாரிகளே என்பது வெளிப்படை. சில வருடம் முன்பு வரை, வெளிநாட்டினரும் ஒரு கியூபக் குடிமகனும் பேசியதாக அறிந்தால், கியூபக் குடிமகனுக்குக் கடும்தண்டனை இருந்தது. சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு கியூபக் குடிமகனுக்கு உரிமை இல்லை.

அரசாங்கமோ, கியூப மக்களை விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பதற்காக இப்படிப்பட்ட தனிப் பகுதிகளை உருவாக்கியுள்ளது என்று கூறிக் கொள்கிறது.

பேராசிரியர் எலிஸா பாசியோ (Elisa Facio), ஹினெடெராஸ் கொண்டுவரும் டாலர்கள் தன்னுடைய புரட்சி அரசாங்கத்தைக் காப்பாற்றிவிடும் என்பதற்காக அரசு இதனை ஊக்குவிக்கிறது என்று கூறுகிறார். எப்படிப்பட்ட சூழலை எதிர்த்து தான் புரட்சி பண்ணியதாக கம்யூனிஸ்டு கட்சி கூறியதோ இப்போது அதனைத் தானே செய்கிறது என்பது ஒரு முரண்நகை.

மார்ச் 2008ல் ரவுல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்ததும், இப்படிப்பட்ட சுற்றுலா தனிப்பகுதிகள் வேண்டாம் என்று உத்தரவிட்டார். இப்போது கியூபாவின் குடிமக்கள் எந்த விடுதியிலும்தங்கலாம்.

மருத்துவச் சுற்றுலாவும் கியூபாவின் அன்னியச் செலாவணி கொண்டு வரும் ஒரு துறை. ஐரோப்பா, தென்னமெரிக்காவிலிருந்து பலர் கியூபாவுக்கு வந்து மருத்துவச் சிகிச்சை பெற்றுக்கொண்டு செல்கின்றனர். டாக்டர் ஹில்டா மோலினா என்ற கம்யூனிஸ அரசு எதிர்ப்பாளர், சாதாரண கியூபக்- குடிமக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ உதவியும்,வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்குக் கிடைக்கும் மருத்துவஉதவியும் மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கிறது
என்று கூறுகிறார்.

Series Navigationகியூபாவின் பொருளாதாரம்70 நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேக மின்னியல் காந்தம் [EM Drive] உந்தும் விண்ணூர்தி