கூகை

Spread the love

                 

வலிக்காமலே அடிக்கலாம்

என வார்த்தையாடினர்

அடித்தல் என்பதும்

கடுமையான அன்பின் வழி

அப்பா அம்மாவிடமும்

அண்ணனிடமும் என்னிடமும்

அடையாளம் காட்டியது

வசவுகள் அடியைவிட

வாழ்வில் மிகவும் ஆபத்தானவை

வழியெல்லாம் அடைத்துவிடும்

எந்தச் சந்தர்ப்பத்திலும்

வழிகளை மூடக்கூடாது

வானத்து இடியினால்

வழிகின்ற வசவும்

வலிக்காமல் அடிக்கின்ற

மின்னலின் வீச்சும்

அடையாளம் காட்டுவது

ஆலமரப் பொந்திலிருக்கும்

அழகான கூகையைத்தான்

===================================

Series Navigation2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்ஒற்றைப் பனைமரம்