கேட்பாரற்றக் கடவுள்!

Spread the love

 

பா.சிவகுமார்

சுருக்கத்தோல்களைக் கண்டதும்

 சுருங்கிக் கொள்கிறது மனம்!
தலையணை மந்திரம் ஓதப்பட்டவுடன்
கடவுள்கள் வலுக்கட்டாயமாக
 வெளியேற்றப்படுகிறார்கள்!
இளகிய மனம் கொண்டவர்கள்
 ஒப்பந்தம் இயற்றுகிறார்கள்
மூன்று மாதங்கள் அங்கும்
மூன்று மாதங்கள் இங்கும்
சஞ்சாரிக்கலாமென.
இறுகிய மனம் படைத்தவர்களால்
வசதியான கடவுள்கள்
முதியோர் இல்லங்களுக்கும்;
வசதியற்ற கடவுள்கள்
தெருவோரங்களுக்கும்
இடம் பெயர்கின்றனர்
 

 

 ஐம்புலன்களை மூடிக்கொண்டு
சங்கீதம் இரசிப்பவர்களுக்கு
நிகழ்கால கடவுளின் குரல்
என்றுமே கேட்பதில்லை.
 
 கேட்பாரற்றக் கடவுள்கள்
 வீற்றிருக்கின்றனர் தேசமெங்கும்
அமாவாசை பண்டிகையைக்
 கண்ணுற்றவாறே…..

 -பா.சிவகுமார்

Series Navigationகருப்பன்ட்ராபிகல் மாலடி