கேள்வியும் பதிலும்

Spread the love

சேலம் எஸ். சிவகுமார்

 

கேள்வியும் பதிலும்

எதிரும் புதிருமாய்க்

கால்மேல் கால்போட்டுப்

பட்டிமன்றம் நடத்திப்

பரிமாறிக்கொண்டக் காலம் –

மாள்வது அறியாமல்

மயங்கும் மனதுக்கு,

 

கேள்வியே பதிலாய்

மாறிவந்து,

சந்தேகக் கடலில்

சேற்றைப் பூசிச்

சுகமாய்க் குளித்துக்

கேள்விக் கணையாய்

மாறி நின்றுக்

கதவைத் தட்டி

மிரட்டும்போது,

 

இனி,

பதிலுக்குப் பதில்

கேள்வியே கேட்கும்

பதில்கள் என்றும் வேண்டாம்,

கேள்விகள் மட்டும் போதும் !

___________________________________

Series Navigationகவி நுகர் பொழுது-9 அகிலாஉயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்