கைகொடுக்கும் கை

                                                          

                                 

(சிங்கப்பூர்)

அதி அவசரத்தோடு

நான்

அவசரமுடிவோடு

நான்

என்னை மீற

யாருமில்லை

யாருக்குமில்லை……

காரண

 காரியத்தோடுதான்

அன்று

அந்த முடிவு

அன்றைக்கு

அது சரி

எனினும்

அம்மாக்கள்

அம்மாக்களே

அவர்கள்

எதிர்த்திசையில்

இலாவகமாக

என்னைக் கையாண்டார்கள்

வயது

வாலிபம்

எல்லாம்

வேர்களாய் இருந்தவேளை

இப்போது

இருட்காடு பயணத்தில்

கையும் காலும்

தளர்கிற நேரத்தில்

கைகொடுக்கும்

அந்தக்கை……

இந்தக்கையை

இழந்திருந்தால்

வெறுங்கை

வெளிச்சமாயிருக்கும்

தாய்நிலை

தனிநிலை

எண்ணிக்குளமாகும்

தடாகத்தில்

ஆனந்தப்பூக்கள்

இனியும்சரி

எப்போதும் சரி

அந்தநாள் அவசரம்

அர்த்தமற்றவையே

அவசரமானவையே

(19.4.2020 காலை 10 மணிக்கும்

நடைபயிற்சியில் தோன்றியது.அன்றில் என்ற

கெளரிசங்கரின் கவிதைத்தொகுப்பில் 16வது பக்கத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது)

Series Navigationபுலி வந்திருச்சி !