கைப்பேசிக்குள் நிகழ்ந்த கவர்ச்சி நடனம்.

Spread the love

 

லாவண்யா சத்யநாதன்

கொட்டிப் போன கூந்தல் மேலே

ஒட்டிவைத்த சுருள்முடியும்

இருந்த புருவம் சிரைத்து

வரைந்த விற்புருவமும்

தூரிகை பூசிய முகப்பொலிவும்

சாயமணிந்த செவ்வாயும்

முட்டுக் கொடுத்த முன்னழகும்

மூடாத வயிறும் சதைத்திரளும்

யானை மறையும் பின்புறமும்

கைப்பேசியில் கண்டு மயங்கி

கூத்தியவளைக் கட்டித் தழுவும்

கற்பனைகளில் மிதக்கும் அற்பமே!

எச்சிலை தேடும் நாய்புத்தி

எப்போது போகும் உன்னைவிட்டு?

சமைத்துப்போட உன் துணிகளை துவைத்துப்போட,

காய்ச்சல் வந்தால் கஞ்சி கொடுக்க

தாளாமல் நீ தவிக்கும்போதுன்

தாபம் தீர்க்க அவள் வரமாட்டாள், முட்டாளே!.

………………………………………………….

பாப்பா தூங்கட்டும்!

 

—லாவண்யா சத்யநாதன்

 

 

Series Navigationதிண்ணை இதழ் ஜனநேசன் படைப்புக்கு விருதுநிமித்தங்கள்