கைவசமிருக்கும் பெருமை

Spread the love

மு. கோபி சரபோஜி

 

தாராளமயமாக்களின் தடத்தில்

கலாச்சாரத்தைக் கலைத்து

உலகமயமாக்களின் நிழலில்

பண்பாடுகளைச் சிதைத்து

பொருளாதாரத்திற்கு ஆகாதென

தாய்மொழியைத் தள்ளி வைத்து

நாகரீகத்தின் நளினத்தில்

இனத்தின் குணங்களை ஊனமாக்கி

அறம் தொலைத்த அரசியலுக்காக

அகதி என்ற பதத்தை இனத்திற்குரியதாக்கி

பழம்பஞ்சாங்கக் குறியிட்டு

மூத்தகுடிகளின் அனுபவங்களைப் புறந்தள்ளி

இனம் காக்க களம் கண்டவர்களை

சாதிகளின் சாயத்தில் தோய்த்து

விழுதுகளாய் வியாபித்து நிற்கும் அடையாளங்களை

முறித்து எறியும் நம்மிடம்

கர்வமாய் அறைந்து சாற்றித்திரிய

எப்பொழுதும் கைவசமிருக்கிறது.

கல் தோன்றா

மண் தோன்றா காலத்தே

முன் தோன்றிய மூத்த குடி என்ற பெருமை மட்டும்!

———————————————————————————-

 

Series Navigationபூவுலகு பெற்றவரம்….!ஆனந்த பவன் நாடகம் வையவன்   காட்சி-17