கொவிட்19

Spread the love

பாதை தவறிய

பழமொழிகள்

பகைவனுக்கும் ஊஹான்

தொற்றாது அருள்

தும்மல் துப்பல்

இருமல் பொத்து

அடையாளம் அடுத்து

வெப்பம் நடப்பு

எச்சில் எமன்

இடைவெளி கூட்டு

யாகாவாராயினும்

கைசுத்தம் காக்க

ஊரோடு சேர்க்குமுன்

உரைத்துப் பார்

ஊஹான் என்றால்

உலகம் நடுக்கும்

கொவிட் என்றால்

குலையே நடுங்கும்

கூடாமல் வாழ்ந்தால்

கோடி நன்மை

கட்டும் எதையும்

கசக்கிக் கட்டு

தொற்றுக் கண்டால்

தூர விலகு

வல்லரசு என்பது

வழக்கொழிந்தது

கொடுங்கோல்

நின்று கொல்லும்

கொரொனா

அன்று கொல்லும்

ஒளிகளாய் தாதியர்

விழிகளாய் மருத்துவர்

தலைக்கு மேல்

வெள்ளமும் சிங்கைத்

தலைமைக்கு அடங்கும்

அமீதாம்மாள்

Series Navigationஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணிசொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்