சமையல்காரி

Spread the love

சிவகுரு பிரபாகரன்
ஆறு மணிக்கெல்லாம் கதவைக் கழட்டுகிற சத்தம்
நினைவோடு இருக்கும் நண்பனில் எவனோ தாழ்ப்பாளை
அவிழ்க்கிறான்
உள்ளே வந்தவள் மழை வெள்ள
தவளை போல் பேசிக்கொண்டே
வேலையைத் தொடங்குகிறாள்
இன்றைக்கு என்ன சமைக்கனும்
காதில் ஊற்றிய காரமாய் கேட்கிறாள்
அங்கே ஒட்டியிருக்கிற அட்டவணை பிசகாமல்
செய்யுங்கள் என்கிறது பணி ஆணை
புளித்துப் போகும் மாவை என்ன செய்வதென தெரியாமல்
அதட்டிய அரை நித்திரை வார்த்தைகளுள்
கட்டுகொள்கிறாள்
என் தலையணையை நான் பசை போட்டு ஒட்டிக்கொள்வதில்லை
அது வடக்கு என்றால் என் தலை தெற்குதான்
என்னதான் இருந்தாலும் அவள் மனது கேட்பதில்லை
ஒரு நாள் மட்டும் எனக்கு நினைவிருக்கிறது
அவள் என் தலையில் ஒட்டிய தலையணை
அம்மாவின் ஞாபகம் வந்து போனது
அம்மாக்கள் எல்லாருமே இப்படித்தான்
இப்போது எனக்கு அவள் சமையல்காரியல்ல
சமையல்கார அம்மாவாகிவிட்டால்.

Series Navigationஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி