சரியா? தவறா?

அம்பல் முருகன் சுப்பராயன்

நேற்றைய சரி
இன்று தவறானது..
நாளை சரியாகலாம்..
எனது சரி
உங்களுக்கு தவறாகலாம்..
உங்களது சரி
எனக்கு தவறாகலாம்…
சரியையும் தவறையும்…
எப்படி தீர்மானிப்பது?
எது தீர்மானிக்கிறது?
பிரச்சினையின் தன்மையா?
காலமா?
சூழ்நிலையா?
இடமா?
மனமா?
இப்படி ஆராய்வது
சரியா? தவறா?

Series Navigation