சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை

வையவன்

எல்லாக் கைதிகளுமே
சின்னஞ்சிறு சிசுக்களாகத்தான்
தென்படுகிறார்கள்
தூங்கும் போது
கைமடித்து ஒருக்களித்து
கவிழ்ந்து மல்லாந்து
கருப்பைக்குள்ளும் வெளியிலும்
ஒரு பாவமும் அறியாது
இருந்த அதே நிலையில்..
துயிலின் தாலாட்டில்
துவண்டு போன தோற்றத்தில் ..
காவலர், நீதிபதி , வழக்கறிஞர்
தண்டனை, பாதிக்கப்பட்டோர்
மற்றும் தம் குடும்பம்
என்று வளரும் சமூகத்தில்
அடப் பாவிகளா என்ற
சாபம் உறங்குவோருக்குக் கேட்காது
விழித்தபின் தான் வெளிப்படுவான்
மூத்து முற்றி முதிர்ந்த
அந்த ஆதி மனிதன்
சற்றே நீடிக்கட்டும்
இந்த இடைவேளை

Series Navigationஅழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதைபிறவிக்குணம்