தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்

This entry is part 53 of 53 in the series 6 நவம்பர் 2011

மனிதனாக பிறந்த ஒவ்வொருவறுக்கும் பல அடையாளங்கள் வாழ்கையில் தேவைப்படுகிறது. இந்த அடையாளங்களே அவனது வாழ்கையின் பல பரிமாணங்களையும் நிர்மாணிக்கிறது. பல அடையாளங்கள் காலப்போக்கில் ஒருவரது வெற்றி தோல்விகளை வைத்து மாறும் தன்மை கொண்டது. ஆனால் சில அடையாளங்கள் என்றுமே மாறாது நிலைத்துதிருப்பவை. (அவை பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளான மொழி, இனம், மதம், தாய்நாடு, கலாசாரம், ஆண்மிகம் பாரம்பரியங்கள் ஆகும். மேலும் இவை ஒரு தாய்மையின் அடையாளங்களாகவே போற்றப்பட்டு வந்தன. எனவே இப்படிப்பட்ட அடையாளங்களை ஒருவன் […]

பூபேன் ஹசாரிகா –

This entry is part 52 of 53 in the series 6 நவம்பர் 2011

மும்பை, நவ.5: பிரபல இசை வல்லுநரும் பாடகருமான பூபேன் ஹசாரிகா மும்பையில் சனிக்கிழமை மாலை 4.37க்கு காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் நோய்வாய்ப் பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டயலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர் காலமானதாக பூபேன் ஹசாரிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர். தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் இவர். பலதுறை வல்லுநராகப் பரிமளித்த இவர், காந்தி […]

நம்பிக்கை

This entry is part 51 of 53 in the series 6 நவம்பர் 2011

ப.பார்த்தசாரதி. துரு பிடித்த ஜாமெட்ரி பாக்ஸ் ஒன்றை பல்லால் கடித்து திறந்த குழந்தை தினமும் அரிசி போட்டாள் என்றாவது ஒரு நாள் மயிலிறகிலிருந்து மயில் வருமென நம்பிக்கையில்.

முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்

This entry is part 50 of 53 in the series 6 நவம்பர் 2011

தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் சட்டென சீதோஷ்ணநிலை உருமாறி விட்டது. திடீரென குளிராய் இருந்தது. சடசடவென கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் பொதுவாக சைகிளில் சற்றித் திரிகிற பயணம் தடைப்பட்டுப் போனது. எனினும் எனக்கு அதில் வருத்தம் ஒன்றுமில்லை. அந்த ஜார்ஜ் கெம்ப்போடு அவளை ஒண்ணாப் பார்த்துத் தொலைத்தபிறகு, இப்ப திருமதி திரிஃபீல்ட் முகத்தை எப்பிடி நேருக்கு நேர் சந்திப்பது, என்னால் முடியுமா அது? அந்தக் காட்சி என்னைக் கலவரப்படுத்தியது, ஆனால் அதிர்ச்சிப் படுத்தவில்லை தான். ஒரு பெரியாம்பளை […]

பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்

This entry is part 49 of 53 in the series 6 நவம்பர் 2011

ஏமாந்துபோன ஒட்டகம்   ஒரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ பயணம் புறப்பட்டான். போகிற வழியில், விகடன் என்கிற ஒட்டகம் பாரம் தாங்க முடியாமல் துன்பப்பட்டு, உடல் தளர்ந்து போய்க் கீழே விழுந்தது. அதன்மேலிருந்த துணி மூட்டையை வியாபாரி கீழிறக்கிவைத்தான். மூட்டையிலிருக்கும் துணிகளைப் பாகம் பாகமாகப் பிரித்து மற்ற ஒட்டகங்கள் மீது சமபாரமாக ஏற்றினான். ‘இந்தக் காடு பயங்கரமாயிருக்கிறது, இங்கே தங்க முடியாது’ என்று முடிவு […]

இந்தியா – குறைந்த விலை பூகோளம்

This entry is part 48 of 53 in the series 6 நவம்பர் 2011

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் மேலை நாட்டு உயர் அதிகாரிகள் பாடும் பல்லவிகள் உடைந்து போன பழைய ரிக்கார்டு போல அலுப்பூட்டுபவை. முதலில் இந்தியர்களின் ஆங்கில அறிவை புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியா உருவாக்கும் ஏராளமான விஞ்ஞான மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பற்றி ஓஹோ என்று புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியாவில் தொழில் ஆரம்பிக்க போவதாகவும் பல ஆயிர இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பார்கள். பிறகு, மேலை நாட்டில் படித்த இந்தியர் ஒருவரை மேலாளராக அறிமுகப் படுத்திவிட்டு விமானம் பிடித்து அவர்கள் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)

This entry is part 47 of 53 in the series 6 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தூங்கச் செல்கிறான் ஒருவன் தான் வசித்த ஊரில் ! கனவில் வேறோர் ஊரில் வாழ்வதாய் நினைவு ! கனவில் நினை வில்லை எந்த ஊர் மெத்தையில் தான் உறங்கிய தென்று ! கனவு ஊரைப் பற்றிய உண்மையை நம்பினான் ! உலகு தூக்க மயக்கம் தருகிறது ஒருவிதத்தில் ! தகர்ந்து போன அநேக நகரங்களின் தூசி வெள்ளம் தரையில் நம்மேல் படிந்திடும் உறங்கி […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)

This entry is part 46 of 53 in the series 6 நவம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “எனக்கு விரிந்த அறிவும், கூரிய நீதித் திறனும் நீடித்த அனுபமும் இல்லாமல், மனிதருக்குப் போதனையோ ஆலோசனையோ கூற அருகதை அற்றவன்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலியின் விழிகள் முதலில் வீசும் ஓரப் பார்வை வாழ்க்கைக் கீதத்தின் ஆரம்ப நோக்கு ! அதுவே முதல் நாடக அங்கம் மனித குலத்துக்கு ! கடந்த கால அதிசயத் துக்கும் […]

பெருநதிப் பயணம்

This entry is part 45 of 53 in the series 6 நவம்பர் 2011

ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று பள்ளங்களில் பதுங்கி நிரம்பி பாறைகளில் தாவிப்படிந்து சரிந்து விழுந்து குதித்து வழிந்து தன்னைத் தாய்மையாக்கி தன்னையே ஈன்றெடுத்து தன்னுள்ளே தன்னைச் சலித்து தன்னைத் தூய்மையாக்கி தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து நிரம்பும் அம்மணங்களைக் கழுவி நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து தன் கனத்தை தானே தாங்கி தன் குணத்தை எங்கும் விதைத்து தன் மணத்தை திசைகளில் தூவி நனைக்கும் கால்களிலும் கைகளிலும் உற்சாகத்தை ஒட்டிவிட்டு தத்தித்தாவி தாளம் போட்டு நடனமாடி நளினமாயோடுது பெருநதி ஒரு துளியும் […]

மூன்று தேங்காய்கள்

This entry is part 44 of 53 in the series 6 நவம்பர் 2011

சந்திரகிரி என்ற ஊரில் திருமேனி என்பவன் தன் மனைவியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையாக இருந்தாலும் விருந்தோம்பும் நல்ல பண்பு அவனிடம் இருந்தது. அவன் மனைவி அமிர்தம் விருந்தினர் யார் வந்தாலும், வீட்டில் உள்ளதை இன்முகத்தோடு முதலில் அவர்களுக்குக் கொடுத்து, மிஞ்சியதை உண்ணும் பழக்கமுள்ளவள். இவ்விதம் இவர்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் வீதி வழியே முனிவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும் வணங்கிய திருமேனி, தன் வீட்டிற்கு வந்து உணவு […]