சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்

Spread the love
ரேவா
*

ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம்

எளிய உண்மை ஏழையாகும் தருணம்
வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம்

குலைத்தள்ளும் சம்பிரதாயம்
கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல்
காதபாத்திரத்தின் ஊனக்கால்கள்

நொண்டிடும் காரணம் கருணை வேண்டிட
பிடித்திடும் தோளில்
வழுக்கு மரம்

முன்னேறும் வாய்ப்பு பறிபோகும் நீர்மையில்
ஆழ வேர்பிடித்த பாசி கற்றுத்தரும் சலனத்தில் முளைக்கிறது கடல்

– ரேவா

Series Navigationவர்ணத்தின் நிறம்காணவில்லை