சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்

கு.கோபாலகிருஷ்ணன்

sukirtharani

 • முனைவர் பட்ட ஆய்வாளர்,

இலக்கியத் துறை,

தமிழ்ப்பல்கலைக்கழகம்,

 •                                              தஞ்சாவூர்.

முன்னுரை

சுகிர்தராணி கவிதைகளில் இயற்கைக் கூறுகள் என்னும் பொருண்மையில் இயற்கையும், இலக்கியமும், இயற்கைப் பொருள் விளக்கம், சான்றுகளை விளக்கி, சுகிர்தராணி கவிதையும், இயற்கை நோக்கும் மழை, நீர், காற்று, இரவு, பகல், கடல், மலை, இன்ன பிற இயற்கை கூறுகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

இயற்கையும், இலக்கியமும்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைப் பெற்றிருக்கும் புதிய வடிவத்தைப் புதுக்கவிதை என்கிறோம்.  வடிவம், உத்திகள் வேறுபட்டு நின்ற போதும் பாடுபொருள் பெரும்பாலும் மரபோடு இயைந்து அமைந்துள்ளது. ஆறிவியல் கூறுகளை எடுத்துரைக்கும்போது புதுக்கவிதை வேறுபடுகிறது.  மற்றைய இடங்களில் மரபின் தாக்கம் அழுத்தமாக நிலவுகிறது.

மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனோடு நெருங்கிய உறவு கொண்டிருப்பது இயற்கை ஆகும்.  ஆறிவியல் வளர்ச்சியில் வழி மனிதன் பேரண்டங்களை எல்லாம் அளந்து வாழ்ந்தாலும் கூட இயற்கையின் அழகிலிருந்து மனிதனைப் பிரித்து எடுக்க இயலாது.

இயற்கையின் பொருள் விளக்கம்

இயற்கை என்ற சொல் இயல்பு என்ற பொருளை உணர்த்துகிறது.  சுபாவம், பழக்கம், நிலைமை, கொள்கை, இலக்கணம், செயற்கைக்கு எதிரானது என்று இயற்கை என்ற சொற்பொருள் கூறுவர்.

 

“இயற்கை என்ற சொல் தனிமை, இயல்பு, பொதுவான ஆற்றல் என்ற பொருள்களில் கம்பன் காலம் வரையிலும் ஆராயப்பட்டுள்ளது.”1 மனதில் செயற்கையாக உருவாக்கப்படாத அனைத்தும் இயற்கை என்பதும் பொருத்தமான விளக்கமாகும்.

“இயற்கை மனிதனைச் சூழ்ந்திருக்கிற

உலகக் காட்சிகளே”2

பஞ்ச பூதங்களின் தொகுப்பு இயற்கையை உருவாக்குகிறது. நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆகும்.

“நிலம், தீ, நீர், வளி விசும்போடைந்தும்

கலந்த மயக்கம் உலகம்”3

இயற்கையின் நுட்பங்களை ஆராயத் தொடங்கிய கவிஞனுக்கு அதன்  அழகு மிகச் சிறப்பான பாடுபொருளாகத் தோன்றின.

 

‘இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைத் தமிழ்ப் புலவர்கள் தாம் கண்ட இயற்கை எழிற்காட்சிகளை அழகான கற்பனை நயந்தோன்ற பாடியுள்ளார்’4 என்ற சிந்தனை ஒப்புநோக்கத் தக்கனவாகும். இயற்கையிலிருந்து கவிஞர்கள் உந்து சக்தியைப் பெற்று, வாழ்வில் சிக்கல்கள்ளை ஏற்படுகின்றபோது தீர்வுகளை இயற்கையோடு இயைந்து வித்திடுகிறார்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலங்களில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமையும் காணலாம்.

‘இயற்கை இறைவனின் திருவுடலாக விளங்குகிறது’5

எனலாம்.

 

 

 

சுகிர்தராணி கவிதையும். இயற்கை நோக்கும்

சமகாலப் பெண் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் சுகிர்;தராணி இவர் தம்முடைய கவிதைகளில் இயற்கையைப்பாடி அதன் வாயிலாகப் பலவிதமான அறிவுறுத்தல்களையும் வித்திடுகிறார்.  இவர் தமது புதுக்கவிதைகளில் இயற்கையைப் பயன்படுத்தும் கூறுகளில்

 1. அழகுணர்ச்சி
 2. அறிவுறுத்தல்

iii.           பாடுபொருளும், பின்புலமும்

iஎ.         நன்றிஉணர்வு வழிபடுதல்

எ.          செயற்கையிலிருந்து மானுடத்தை மீட்டல்

பழந்தமிழ்க் கவிதைகளில் இயற்கை பாடப்பட்டதற்கும், இப்போது அது சுகிர்ந்தராணியால் பாடப்படுவதற்கும் இடையே வேறுபாடுகளைக் காணலாம்.  ஆறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் ‘கற்பனைக்கு’ இடம் தரப்பட்டுள்ளன.

மழைக்காலம்

இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ச்சியடைவதும் சொந்த உணர்ச்சிகளை வெளியிடுவதும் இயல்பாகப் புலப்படுகிறது.

‘தளிர் கவ்வியச் செம்புறாவெனத்

தொடங்குகிறது மழைக்காலம்

முதல் துளிப்பட்டதும்

முன்னர் நிகழ்ந்ததை

………………..

நினைவுப்படுத்துகிறது……….’6

என்று பறவைகள், மழை, துளிகளை வியந்து காதலோடு இணைத்துப்பாடுகிறார்.

குளம். நீராலானவள்

நீர் நிலைகளைப் பற்றிப் பாடுகிறார் மற்றும் இயற்கை வளங்களையும் சுட்டுகிறார்.

“எப்புறமும் மலைகள் சூழ்ந்த

நீர்த்தடாகத்தில் நீந்துகிறாள்”7

என்பதும்

காற்று

……

காதலின் புறத்தோல்

சுழன்று விழ

புயலின் விசையோடு

உனக்குள் பாய்கிறேன்

…………….”8

என்பதில் காதலும், புயலும் ஒப்பிடப்படுகிறது.

 

இரவு – பகல்

இரவும், பகலும் பற்றி உவமை செய்யும் போது,

“இரவுகளும், பகல்களும் தீர்ந்து

போனதொரு பருவம்….

மிருகங்களோடு பழகுவது…”9

என்பதில் இரவு, பகல், மிருகம் இவற்றை எடுத்துக் காட்டுகிறார்.

“நீரால் சூழப்பட்டிருந்ததாம்

மீன் குஞ்சுகள்

என் கால்களைக் கொத்தவும்

நீர்ப்பூக்களின் மொக்குகளைப் போல

….”10

என்பதில் மீன், நீர், பூக்கள் இவைகளைச்சுட்டுகிறார்.

“மழை தரும் மலைப் பிரதேசத்தில்

பல யுகங்களுக்குப் பிறகு

குளிர்ந்த என்னுள் பூத்திருக்கிறது

சூடப்படாத காமத்திப்பூ” 11

என்பதில், மழை, மலை, யுகம், குளிர், பூக்கள் இவைகளை அறிய முடிகிறது.

“எத்தனை வெளிப்படையானது

இந்த இலையுதிர் காலம்

பூக்களின் இதழ்கள் எல்லாம்

முன்சென்ற பருவங்களால்….”12

என்பதில் இலையுதிர்களைப் பற்றி காதலோடு இயைபுபடுத்துகிறார்.

 

சரிந்த மலையின் அடிவாரத்தில்

நிலவு உறங்கி இருந்தது

கழுத்து நீண்ட பெண்மயில் ஒன்று

கற்களையும் முட்டைகளை

அடைகாக்கும் பறவையை..

வண்டுகள் மொய்த்துக் கிடக்கின்றன

…….நீர்த்த நிழலைப் போல

நரத்தம்பூவில் வாசனை

கணு நீண்ட மூங்கில்…”13

என்பதிலும்,

“…………

காட்டுக்கோழியைப் போல நீந்துகின்றேன்

கனவும் காந்தர்வமும்

இருமுலைகளாகித் தொங்கும்

ஐந்திணைப் வெண் நளன்”14

என்று ஐந்திணையும் பெண்ணும் ஒப்பிடுகிறார்.

 

தற்காலப் பெண் கவிஞர் சுகிதர்ராணி இயற்கை நிலம், மலை, காடு, கடல், நீர், பறவைகள், விலங்குகள் இன்ன பிறவற்றையும் சமூக நிலையோடு ஒப்புமைப்படுத்துவதை அறியலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சான்றெண்விளக்கம்

 

 1. துரை, சீனிச்சாமி, கம்பனில் இயற்கை, ப.87
 2. போது
 3. தொல்காப்பியம், பொருள், மரபியல், நூற். 91
 4. இரா. மாயாண்டி, சங்க இலக்கியத்தில் கற்பனை, ப. 143.
 5. ப. அருணாசலம், பக்தி இலக்கியம், பக். 218 – 219.
 6. சுகிர்தராணி, காமத்தீப்பூ., ப.18.
 7. மேற்படி., மெ.நூ., ப.20.
 8. மேற்படி., மெ.நூ., ப.21.
 9. மேற்படி., மெ.நூ., ப.23.
 10. மேற்படி., மெ.நூ., ப.24.
 11. மேற்படி., மெ.நூ., ப.31.
 12. மேற்படி., மெ.நூ., ப.34.
 13. மேற்படி., மெ.நூ., ப.35.
 14. மேற்படி., மெ.நூ., ப.43.
Series Navigationஇலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!காதலனின் காதல் வரிகள்