சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

subrabharathimanian_554

“ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும்  “

” காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை. அதைப் பெற அவர்கள் போராட வேண்டும்.

“ என்று திருப்பூரில் நடந்த நாவல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள்  தெரிவித்தனர்.

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்   ” சப்பரம் “ என்ற நாவல் வெளியீட்டு விழா பெருமாநல்லூர் சாலை    ” முயற்சி “ அலுவலகத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை  தாங்கினார்,       ” சப்பரம் “ நாவல் திருப்பூர் பகுதி நெசவாளர் குடும்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்படிருந்தது.( சென்னை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது விலை ரூ100)   நாவலை வெளியிட்டு கலால் சேவை வரித்துறை ஆணையர் ஏ.கே.ரகுநாதன் IRS -அய்.ஆர்.எஸ் ( ஓய்வு ) பேசுகையில் ” திருப்பூரில்  பனியன் தொழில் நிறுவப்படுவதற்கு    முன்பு நெசவுதான் பிரதான தொழிலாக இருந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நெசவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உணவு, கல்வி,  மருத்துவம் என்று அவர்களின் தேவை நிறைவேற்றப்படாததால் அவர்கள் பனியன், பவர்லூம் என்று சென்று விட்டனர்.” என்றார்.நாவலின் முதல் பிரதிகளை பாரதிவாசன்( பதியம்), தமிழ்ச்செல்வி          ( சமூகநீதிப்பதிப்பகம்) , செ. நடேசன் ( தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்-முன்னாள் மாநில செயலாளர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நாவலை அறிமுகப்படுத்திய கவிஞர் ஜோதி                “ ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு.. அது நசிந்து விட்ட்து “ என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன்: “   காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை. அதைப் பெற அவர்கள் போராட வேண்டும். சொசைட்டியில் நெய்யும் நெசவாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள். சொசைட்டிகள்  பெரும்பாலும் ஊழல் மயமாகவும், அரசியல்வாதிகளின் பிடியிலும் உள்ளன. அண்ணா, கலைஞர் போன்றவர்கள் அவர்களின் ஆட்சி காலத்தில்  தோளில் கைத்தறி துணிகளைப் போட்டு விறப்னை செய்து முன்னோடிகளாக இருந்தனர். தொழிலாளி அந்தஸ்து, உரிமைகள் பெற  நெசவாளர்களின் ஒன்றுபடுதலும் போராட்டமும் தேவை. அப்போதே அவர்களுக்கு ஓரளவு சமூக பாதுகாப்பு கிடைக்கும்.உலகமயமாக்கல் கைத்தறி நெசவு போன்ற புராதன தொழில்களை ஒழித்துக் கொண்டு வருகிறது.இயந்திரமயத்தில் அவர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் முடைவோர், பட்டு, கோரா, பம்பர் நெய்பவர்கள் எல்லோரும் நெசவாளர்களே. ஆனால் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் நெய்பவர்கள் வறுமையின் கோட்டின் கீழ்தான் இருக்கிறார்கள். பட்டு, பம்பர்கோரா கைத்தறியில் நெய்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களாக இருப்பது ஆறுதல் தருகிறது. 1 கோடி பேர் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கைத்தொழிலை சொந்தத் தொழிலாக கொண்ட குடுமப்ங்களில் இந்த அவலம் இல்லை.  அது நெசவோ, மர வேலையோ…. எம்பிஏ படித்தவன் 5,000 ரூபாய்க்கு அலைய வேண்டி உள்ளது. நெசவாளர் வீட்டுப்பையன்  சுலபமாய் அதை விட 4 மடங்கு சம்பாதித்து விடுவான். ஆனால் நெசவாளி அவனது மகனை  நெசவாளி ஆக்க விரும்புவதில்லை. நெசவுத்தொழில் சரியான ஆட்கள் இல்லாமல், புதிய தலைமுறையினரின் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. நெசவாளி சம்பாதித்து குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் ஆக்குகிறான். ஆனால் நெசவாளன் குடும்பத்துக்கு பெண் தர விருப்பமிருக்காது பலருக்கு. படித்தவன் கணிசமான வருமானம் இருந்தாலும் நெய்வதில்லை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் தொழில் நடக்கும். தனியாள் வேலையாக அது இல்லை..” என்றார்

கருணாமனோகரன் எழுதிய “ சாதி-வர்க்கம்-தேசியம்” நூல் பற்றி செ, நடேசன், தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். கருணாமனோகரன் திருப்பூரில் வாழ்ந்து மறைந்த மார்ச்சிய சிந்தனையாளர். அவரின் 7 நூல்களை சேர்த்து கோவை சமூக நீதிப் பதிப்பகம்“ சாதி-வர்க்கம்-தேசியம்”  என்ற நூல் வெளியிட்டுள்ளது.( ரூ 400 விலை ) முன்னதாக கனல்மதி,பாரதிவாசன், சிவதாசன், ரகுசெல்லம், ரத்தினமூர்த்தி , மதுராந்தகன்,அரசபாண்டியன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். கல்வி மேம்பாட்டுக்குழுத் தலைவர் காங்கயம் சு.மூர்த்தி         “ போபால் கல்வி யாத்திரை “ என்ற தலைப்பில் பேசினார். கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம்), சிதம்பரம்( முயற்சி ), குமார் ( தமிழ் வளர்ச்சித் துறை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பழ,விசுவநாதன் நன்றி கூறினார்.

Series Navigationமருத்துவக் கட்டுரை – குடல் புண் அழற்சிசீரங்க நாயகியார் ஊசல்