சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 22 in the series 28 டிசம்பர் 2014

பேரூர் ஜெயராமன்

சுப்ரபாரதிமணியனை அவரின் “ சாயத்திரை” நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது வெளிப்படுத்துகிறது.

இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் மூலம் சுற்றுசூழல் சார்ந்த உரையாடல்களை விரித்துக் கொண்டு போகலாம். தேன் போல் பயன் உள்ளவை இக்கட்டுரைகள். தேன் யாருக்குப் பிடிக்காது.

ஆனால் மீத்தேன் யாருக்கும் பிடிக்காதுதான். மீத்தேன் எடுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் இடங்களை நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். அந்த என் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை இதில் உள்ள கட்டுரை.

2013ம் ஆண்டின் மிக முக்கியமான சுற்றுச் சூழல் சார்ந்த உலக அளவிலான பாதிப்புகளைப் பற்றி இந்நூல் பேசுகிறது.ஜார்கண்ட்டின் பெரும் வெள்ளம், இந்தோனிசியாவின் புயல், ஹயான்னாவின் சிரமம், கார்களால் சுற்றுசூழல் கேடு உட்பட பல தகவல்களைச் சொல்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய பலரை அறிமுகப்படுத்துகிறார். அதில் நம்மாழ்வாரும் இருக்கிறார்கள்.இந்த கட்டுரைகளின் அறிமுகங்கள் மூலம் குப்பையை உற்பத்தி செய்பவனுக்கு அதை ஒழுங்குபடுத்த, சுத்தம் செய்யும் பொறுப்பு இருப்பது உணர்த்தப்படுகிறது. சிறு ஆறு அதன் உற்பத்தி இடத்தில் சின்னதாக அமைந்திருந்தாலும் அது போகப் போக அக்லமான, நீளமான ஆறாகப் பரிமாணம் அடையவும் அதிகப்யன்பாடு கொள்ளவும் நம் செயபாடும் இருக்கவேண்டும். சுற்ற்சுசூழல் பற்றித் தனியே பேச வேண்டியதில்லை. அது வாழ்க்கையோடு இணைந்தது. அதைப் பேசுவதைத் தவிர்க்க இயலாது விஞ்ஞானம் நம் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பதை இக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன.மிச்சமுள்ள மலை எவ்வளவு, . மிச்சமுள்ள மரங்கள் எத்தனை என்று ஒவ்வொரு மரம் நடும் போதும், மலையைப் பாதுகாக்கப் பேசும் போதும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விகளை இக்கட்டுரைத் தொகுப்பும் வெளிப்படுத்துகிறது.

சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து எழுதியும் இயங்கியும் வருவதை சாயத்திரை நாவல், குப்பை உலகம், நீர்ப்பாலை போன்ற கட்டுரைத் தொகுப்புகளின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. எழுத்துப் பதிவு சுற்றுசூழல் சார்ந்த செய்ல்பாடுகளில் முக்கிமானது என்பதை இவரின் எழுத்து மெய்ப்பிக்கிறது.

( கோவையில் நடைபெற்ற ஓசை சூழல் சந்திப்பில் மேகவெடிப்பு வெளியிடப்பட்டது.காளிதாசன் தலைமை. நித்திலன், சிஆர் ரவீந்திரன், அவைநாயகன் முன்னிலை வகித்தனர்)

( மேக வெடிப்பு ரூ 50 , எதிர் பதிப்பகம்., பொள்ளாச்சி :9865005084

Series Navigationதொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *