சுறாக்கள்

Spread the love

 

எதுவோ கொடுத்த

தைரியத்தில்

தொடங்கி விட்டேன்.

 

யோசித்த பிறகே புரிந்தது

தொடங்க வேண்டும் என்ற

எத்தனிப்பு மட்டுமே

போதுமானதாக இருந்தது

தொடங்குவதற்கு.

 

எல்லோரும் சுற்றி வளைத்தனர்

என்ன செய்யப் போகிறேன்

என்பதைப் பார்க்க

 

அவர்களின் கேள்விப் பார்வைகள்

மெள்ள மெள்ள

மீன் குஞ்சுகளாய் நெளியத் தொடங்க

எல்லாவற்றையும்

விழுங்கியபடி முன்னேறின

எனது எத்தனிப்பு சுறாக்கள்.

–    நிஷாந்தன்

Series Navigationநாள்தோறும் நல்லன செய்வோம்.ஜென்ம சாபல்யம்….!!!