செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்

சிறகு இரவிச்சந்திரன்.

மயக்கம் என்ன செ.ரா. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

‘ சொந்தக் கற்பனை இல்லாதவர்களை, ஆங்கிலப் படங்களிலிருந்து ஒற்றி எடுப்பவர்களை நடுத்தெருவில் வைத்து அடிக்க வேண்டும் ‘ இதே வார்த்தைகள் இல்லை என்றாலும் இது போன்ற ஒரு தொனியில் சொல்லப்பட்டதாக நினைவு.
ஆஹா இவர்தான் ஒரிஜினல் பார்ட்டி என்று மனம் துள்ளிக் குதித்தது. எல்லாம் மம்மி பார்க்கும்வரைதான். சமீபத்தில் சோனி பிக்ஸில் போட்டார்கள். அட! ஆயிரத்தில் ஒருவன் போல இருக்கிறதே என்று யோசித்தேன். அப்போதும் தமிழனை விட்டுக் கொடுக்க மனம் துணியவில்லை. பிறகுதான் தெரிந்தது, இது பழைய படம். அதற்கப்புறம் அதேபோல் இரண்டு பாகம் வந்து விட்டது என்று.
ஆ.ஒ.படத்தில் கடல் அட்டை போன்ற சில ஜந்துக்கள் துரத்தும். பிடித்துவிட்டால் மொத்தமாக குதறி எடுத்து விடும். மம்மியில் ஒரு வகை வண்டு. உடலுக்குள்ளே போய் மொத்தமாக தின்று விடுகின்றன. புதைமணல் காட்சியும் அதிலிருந்து சுடப்பட்டதுதான். அதிலிருந்து தப்பிக்க நிழல் வழி காட்டும் யுக்தியை மெக்கனாஸ் கோல்டில் இருந்து சுட்டிருக்கிறார். ஆராய்ச்சியாளரான தந்தையைத் தேடி கதாநாயகி போவதும் இதை ஒட்டித்தான். இதிலும் கதாநாயகிக்கு பண்டைய மொழிகளும் சின்னங்களும் தெரியும் ஆண்டிரியா போல.
பெண்களின் முலைகளைக் குத்தி ரத்தம் குடிக்கும் மன்னன் பாத்திரம் ராஜபக்ஷே என்கிறார்கள். இளமைக்கு மருந்தாம் அது. படத்தில் பார்த்திபன் நல்லவன். அப்போ பக்ஷே?
தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை யாரும் யோக்கியன் இல்லை என்பது தெளிவாகிறது. விஷ்ணுவர்தன் தனது சர்வம் படத்தை அப்பட்டமாக ஒரு ஆங்கிலப் படத்தை ஒற்றி எடுத்தார். பிரகாஷ்ராஜ் அபியும் நானும் படத்தை மையப் பாத்திரங்களைக் கூட மாற்றாமல் ஒரு ஆங்கில படத்திலிருந்து சுட்டார். இதில் கன்னட ரீமேக் வேறு.. அதில் அவர் இயக்குனர்.
எந்திரன் கேட்கவே வேண்டாம். பல படங்களின் ஷ¥ட் அவுட். லிட்டில் ஒண்டர், ஐ ரோபோ, ரோபோ காப் என்று ஏகத்துக்கு. இதில் ஒருவர்- நச்சினார்க்கினியனோ நபும்சகனோ – எனது கதை என்று கேஸ் வேறு போட்டார். 36 ரோபோக்களில் ஒன்று கூடுதல் அறிவுடன் தப்பித்துப் போவதை ஐஸக் அஸிமோவ் பல வருடங்களுக்கு முன் கதையாக எழுதிவிட்டார். நன்றிக்கடனாக ஷங்கர் வசனத்தில் அவரை நினைவு கூர்ந்தார். அவ்வளவே.
இதற்கு மிஷ்கின் எவ்வளவோ தேவலை. ஜப்பானிய படம் என்று சொல்லிவிட்டுத்தான் நந்தலாலா எடுத்தார். உடனே ஒற்றி எடுப்பவர்கள் எல்லாம் ஓலமிட ஆரம்பித்தார்கள். எதற்கும் பதில் கொடுக்கவில்லை என்பதுதான் மிஷ்கினின் விசேஷம். குட்டு உடைந்து விட்டதே என்று குமுறியவர்கள் படத்தை பெட்டிக்குள் அடைத்து விட்டுத்தான் ஓய்ந்தார்கள்.
ஆ.ஒ. பாகம் இரண்டு தயாராம். மூன்றாம் பாகம் கூட வரலாம். மம்மிக்கு அடுத்து இரண்டு பாகங்கள் வந்து விட்டனவே.
சோனி பிக்ஸையும் டைம்ஸ் நௌவையும் தொடர்ந்து பார்க்க வேண்டும். மயக்கம் என்ன மூலத்தை அறிந்து கொள்ளத்தான். மூலத்தை அறிந்து கொண்டால் களிம்பு தடவிக் கொள்ளலாம். எரிச்சல் அடங்கும்.
0

Series Navigationகதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘திண்ணையில் கண்ணம்மா பாட்டி