சொல்லாய் அர்த்தமாகும் கல்

Spread the love

 

 

 

 

சிறு கல்லொன்றைச்

சீறும் கடல் மேல் எறியும்

குழந்தை.

 

நீலநெடுங் கடல்

நீட்டி ஆயிர அலைக் கைகளை உயர்த்திப்

பிடிக்கப் பார்க்கினும்

பிடி தவறி விழும்

கல்.

 

குழந்தை கைதட்ட

கூடக் கடலும்

கை தட்டும்

குழந்தை முன்

குழந்தையாகி.

 

ஆழ ஆழும்

ஆழ்கடல் இதயத்தின் ஆழம் தொட

குழந்தைக்கு மட்டுமே அர்த்தமாகும்

ஒரு சொல்-

கல்.

 

 

 

 

 

 

கு.அழகர்சாமி

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் – வங்கச் சிறப்பிதழ்வெறியாடல்