சோ – தர்பார்

Spread the love

துக்ளக் ஆண்டு விழாவில், சோ பேசிய போது, தான் ஒரு தூரத்து பார்வையாளன் என்று கூறிக்கொண்டார். அவரது பார்வையில், திமுக வை அடியோடு அழித்துவிட வேண்டும் எனவும், ஜெயலலிதா தான், இந்தியாவின் பிரதமருக்கு ,தகுதியானவர்.அவரது ஆட்சி, மோடி ஆட்சியை விட , சாலச்சிறந்ததாக் விளங்கும் என்ற அவரது தீர்க்கதரிசனத்தை வைததார்.

அவரது பார்வையில் ஒரு வன்மம் காணப்பட்டது. தான், எந்த கட்சியையும் சாராதவன் என்றும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு, பிஜெபியை தூக்கிக் கொண்டாடினார்.
மம்தா பனார்ஜி அவரது கண்ணில் படவில்லை. ஆனால், அத்வானி நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகின்றார்.

பமாகாவை பையித்தியாகாரக் கட்சி ;

கம்யூனிசம் அய்யோ பாவம்.

காங்கிரச ஊழ்ல் நிறைந்த கட்சி, உருப்படாதக் கட்சி.

அன்னா அசாரே டிவி சேனலில் புகழ் பெற்றவர்; எதையும் உருப்படியாக் செய்ய முடியாதவர்” என்ற அடை மொழி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
இப்படிப்பட்ட பார்வை உள்ளவர், எப்படி தன்னை, நேர்மையான பார்வையாளர் என்றும், சரியாக எதையும் சிந்திக்கூடியவர் என்றும் சொல்லிக் கொள்ள முடிகின்றது. எதிர்க்கட்சியே இல்லாமல், ஒரு அரசு, நேர்மையாக் செயல் படமுடியுமா? மாற்றம் தேவை என்பது மக்களின்எதிர்பார்ப்பு, அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒரு நடுநிலை பார்வையாளன், ஆட்சி செய்கினற அரசின் நடுநிலை தவரும்போது, அதனை சுட்டிக்காட்டிடவேண்டும். ஓரு ஆட்சி மக்களாட்சியாக மலர வழிவகை செய்ய வேண்டும். \
மற்ற தருமங்களை எல்லாம், சம்ஃகிருத மொழி வாயிலாக தெரிந்துக் கொண்டு சொல்பவர்,
நடுநிலை மாறாமல் ஆட்சி செய்யவும் சொல்லி தரவேண்டும்.

என்னை போன்ற , நடுநிலை பார்வையாளர்கள், தழிழ் நாட்டில் உள்ளனர் என்பதை போன தேர்தல் முடிவு சொன்னது. அதனை, சோ போன்றவர்கள் மறந்து விடக்கூடாது.

ஜெயானந்தன்.

Series Navigationஒரு நாள் மாலை அளவளாவல் (2)மூன்று நாய்கள்