ஜன்னல் கம்பிகள்

சேயோன் யாழ்வேந்தன்

 

ஜன்னல் கம்பிகளுக்கு

இருபுறமும்

நாம் நின்றிருந்தோம்

நீண்ட நேரம்

பின் திரும்பி

அவரவர் வழி சென்றோம்

வெகு தூரம்

கொஞ்சம் விலகி நின்று

பார்த்திருந்தால் அறிந்திருப்போம்

அந்த ஜன்னல் கம்பிகள்

சுவர்களில்லா காலவெளியில்

மிதப்பதை

Series Navigation     நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !