ஞாயிற்றுக்கிழமை

 

பேரா. செ. நாகேஸ்வரி

                                                                                                                                                    இலொயோலா கல்லூரி

வேட்டவலம்

அலைபேசி எண் : 8695987997

 

 

 

விடுமுறை என்றதுமே

விதவிதமாய்

எண்ண ஓட்டங்கள்

விதிவிலக்கு ஏதுமில்லை

வேலைக்கு போகும்

பெண்களுக்கு!

 

முதல்ல வீட்ட ஒழிக்கோனும்

கூட்டித் தொடைக்கோனும்

அழுக்குத்துணியை ஒதுக்கோனும்

அசராம வேலை பாக்கோனும்

 

புள்ளைங்களுக்கு

எண்ண தேய்ச்சி ஊத்தோனும்

ஈறு, பேணு எடுக்கோனும்

இன்னைக்காச்சி என் கையால

புள்ளைங்களுக்கு

சோறு ஊட்டோனும்!

 

கடகன்னிக்கு போகோனும்

காய்கறி வாங்கோனும்!

வீட்டுக்கு வந்தவங்கள

வில்லங்கம் வராம

கவனிக்கோனும்!

 

மூட்டத் துணி

துவைக்கோனும்!

முடியலனாலும்

மடிப்பு மாறாம

அயன் போட்டு வைக்கோனும்!

 

மட்டன் சிக்கன் செய்யோனும்

மாவு அரச்சி வைக்கோனும்

புள்ளைங்கள

இந்தி டியூசன் அனுப்போனும்!

தெரியலனாலும்

இந்தி சொல்லி கொடுக்கோனும்

இது வீட்டோட கட்டளங்க!

 

வரப்போற ஆறு நாள ஓட்ட

புள்ளைங்களுக்கு

புத்திமதி சொல்லோனும்!

மத்தபடி ஒன்னுமில்லை

அன்னைக்கு விடுமுறை தான்!

Series Navigationவடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்தந்தைசொல் தட்டினால்…