டெங்கூஸ் மரம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 11 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

– சேயோன் யாழ்வேந்தன்
அதோ
தூரத்தில் தெரிகிற
டெங்கூஸ் மரத்தில்
நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப்
பார்த்தேன் என்றான்
பக்கத்து வீட்டுப் பொடியன் –
வெகு தொலைவிலிருக்கிற மரம்
இன்னதென்றே தெரியவில்லை
தவிரவும் டெங்கூஸ் என்றொரு
மரமே இல்லையென்றேன் –
டெங்கூஸ் மரங்கள்
தூரத்து மலைகளில் மட்டுமே இருக்கின்றன
அவற்றை யாரும் அருகினில் பார்த்ததில்லை
டெங்கூஸ் என்றால்
தூரம் என்றொரு பொருளும் உண்டு
இன்னும் பெயரிடப்படாத
ஒரு மொழியில் – அது
டெங்கூஸ் மரந்தான்
என்றான் மறுபடியும் –
நேற்று அதில்
அமர்ந்திருந்தது என்னவென்று
மறுபடியும் அவனிடம் கேட்கவில்லை
—————————————-
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationமாயமனிதன்காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம்( 4 )
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *