தசரதன் இறக்கவில்லை!

தசரதன் இறக்கவில்லை!
This entry is part 30 of 35 in the series 29 ஜூலை 2012

கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். அவளுக்கு பரதன் பிறந்தான்.

 

மூன்றாம் மகள் சுமத்திரையும் திருமணமாகி புகுந்தவீடு போனாள். அவளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தபோது அவளும் இறந்துவிடவே எல்லாப் பிள்ளைகளும் தசரதன் கேதகியிடமே வளர்ந்தார்கள்.

 

தசரதனின் முன்னோர்களுடைய ஆஸ்தியான அந்தவீடு எப்போதும் ரிப்பேராகி தொந்தரவு வருகிறது என்று தசரதன் அதைவிற்றுவிட்டு வாடகை வீட்டிற்கு குடிபோக எண்ணினான்.ஆனால் கேதகிக்கு விருப்பமில்லை. ராமன் நன்றாக படித்து ஸாப்ட்வேர் இஞ்சினீயராகிஅமெரிக்காபோனான், தசரதனுக்கு விருப்பமே இல்லை.

 

பரதனுக்கு படிப்பே வரவில்லை அதனால் வீட்டை அவனுக்கு எழுதிவிடு என்று கேதகி வற்புறுத்தினாள். தசரதனுக்கு இஷ்டமில்லை தாயில்லாப்பிள்ளை ராமன் தன் சொந்த முயற்சியில் சம்பாதிக்கிறான். பரதன் படிக்கவுமில்லை வேறு எந்த வேலை செய்யவும் முயற்சியும் செய்யவில்லை. தாயின் ஆதரவும் இருக்கிறது என்று மனம் நொந்து ராமன் போன பிறகு தசரதன் படுத்த படுக்கையானான். ஆஸ்துமா தொந்தரவும் உண்டு.

 

லக்ஷ்மணன் சத்ருக்கான் படிப்பு முடிந்து வேலை கிடைத்து எல்லாருக்குமே திருமணம் நடந்தது லக்ஷ்மணன் தன் மனைவியின் பட்டப்படிப்பு முடியும் வளர இந்தியாவில்இருக்கட்டும் என்று விட்டுவிட்டுதான் ராமனுடன் அமெரிக்கா போனாள். சீதாவும் கம்ப்யூட்டர் கற்றிருந்ததால் உடனே வேலைகிடைத்துவிட்டது. அவர்கள் சம்பாதித்து பணம்அனுப்ப அனுப்ப கேதகி தன் வீட்டை புதுமாடலாக்கி கார்வாங்கி என்று தன் சொந்த செலவுகளை இஷ்டம் போல கவனித்தாள். தன் கையாலாகாத நிலைமையை எண்ணி தசரதன் பேசுவதைக்கூட நிறுத்திவிட்டார்.

வேலை விஷயமாக ராமனுக்கு வேறு ஒரு இடம் போகவேண்டி இருந்தபோது ராமன்
லக்ஷ்மணனிடம் வீட்டை கவனித்துக்கொள்ளச்சொல்லி சீதையையும் ஒப்படைத்து
விட்டுப் போனான். ஆபீஸ் போகும்போதும் வரும்போதும் சீதாவை கவனித்துவந்த ராவணன், லக்ஷ்மணன் இண்டர்நெட்டில் கவனமாயிருந்த சமயம் சீதாவை
கடத்திப் போய்விட்டான்.

அங்கு ராமன் காத்திருப்பதாக ராமனின் குரலை பதிவு செய்துவந்து காட்டி சீதாவை

ஏமாற்றி ஒரு காட்டு குகையில் அடைத்துவைத்தான் ராமன் வந்த போது விவரங்கள்

தெரிந்ததும் இருவரும் தவித்துப்போளினார்கள். உடனே ஒரு டிடெக்டிவ் உதவியுடன் சீதையைக் கண்டுபிடித்து ராவணனை சிறையில் அடைத்தனர்.

 

சீதா ’போதும் நமக்கு அமெரிக்காவாழ்வு என்று அழுதபோது’ எல்லாருமே இந்தியா

கிளம்பினார்கள். தசரதனுக்கு பேசமுடியாமல் நாக்கு இழுத்துவிட்டது பிள்ளையைப்

பார்த்து கண்ணீர் வடித்தார் கேதகியே வருந்தி ”பதினான்கு வருடம் பிரிந்திருந்தோம்

இனி நாம் கூட்டாக வாழுவோம்”, என்று சொன்னது தசரதனுக்கு தேனாக ஒலித்தது. ராமன் “எனக்கு அயோத்தியில் வேலை கிடைத்திருக்கிறது நான் சீதையுடன் அங்கு போகிறேன்.அடிக்கடி வருவேன். கவலைப்படாதீர்கள்’’ என்றான்.

மறுபடி தசரதன் அழுதான். எனக்கு ஏன் சாவு வரமாட்டேனென்கிறது? தசரத மகாராஜா ராமன் பிரியும்போது உயிரைவிட்டார் என்பதுபோல நானும் போகமுடியவில்லையே என்று வருந்தினான்.

————————————

Series Navigationகனலில் பூத்த கவிதை!பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி

4 Comments

  1. Avatar Ravi

    Ramayan ( III)

    New Release Blu Ray Version

  2. Avatar Gowtham

    புன்னகையை வர வைத்தது இந்தக் கற்பனை ஒப்பீடு. பல இந்நாள் (அமெரிக்க மோகப் பிள்ளைகளின்) பெற்றோர்களின் நிலையும் இதுவே. நாகரீகம் கருதியே அந்த குகை & இராவணன் ஒப்பீட்டை மேம்படுத்தவில்லை என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் அம்மா. தொடருங்கள் உங்கள் கற்பனையை.

  3. Avatar chandra

    i think you are living in america

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *